எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, December 18, 2011

பிரதமருக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா கடிதம்

இரு வாரங்களில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடக்கமா?
கூடங்குளத்தில் பணிகளைத் தொடங்குவதற்கு முன்
அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்
பிரதமருக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா கடிதம்


சென்னை, டிச. 18-
கூடங்குளம் அμமின் நிலையத்தில்
பணிகள் எதையும் தொடரக் கூடாது என
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடிதம்
ஒன்றை எழுதியுள்ளார்கள்.
கூடங்குளம் அμமின் நிலையம்
தொடர்பாக மக்களிடையே எழுந்த
அச்சத்தின் காரணமாக அதற்கு எதிரான
போராட்டங்கள் அந்தப் பகுதியில் நடந்து
வருகிறது.அந்தப் போராட்டத்தை முடிவுக்குக்
கொண்டுவரவோ மக்களின் அச்சத்தைப்
போக்கவோ மத்திய அரசு எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்த முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களின்
அச்சத்தைப் போக்க வேண்டியது மத்திய
அரசுதான் என்றும், மத்திய அரசு தனது
பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது என்றும்
குற்றம் சாட்டினார்கள்.
அதனை அடுத்து ஓடோடி வந்த மத்திய
அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம்
சென்று போராடும் மக்களிடம் பேசினார்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
கூடங்குளம் மக்களின் அச்சம் தீரும் வரை,
பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என
வலியுறுத்தினார்கள்.
தமிழக அமைச்சரவையில் இது
தொடர்பாக தீர்மானம் ஒன்றும் நிறை
வேற்றப்பட்டது.
நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்
தலைமையில் குழு ஒன்று டெல்லி சென்று
பிரதமரைச் சந்தித்தது. அதன் பேரில் நிபுணர்
குழு ஒன்று அமைக்கப் பட்டு பேச்சுவார்த்தை
நடத்திக் கொண்டி
ருக்கும்போதே ரஷ்யா
சென்ற பிரதமர் அங்கு
செய்தியாளர்களிடம்
இ ரு வ � ர ங் க ளி ல்
கூடங்குளத்தில் மின்
உற்பத்தி தொடங்கும்
என அறிவித்துள்ளார்.
இதற்கு தமிழக
முதலமைச்சர் புரட்
சித்தலைவி அம்மா
அவர்கள் தனது கடும்
எதிர்ப்பைத் தெரிவித்
துள்ளார்கள்.
இது தொடர்பாக
பிரதமருக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியுள்
ளார்கள்.
அந்தக் கடிதத்தில்
மு த ல � ம ச் ச ர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
தெரிவித்திருப்பதாவது-
ரஷ்ய அதிபருடன் இணைந்து நடத்திய
பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது
கூடங்குளம் அμமின் நிலையம் 2
வாரங்களில் தனது உற்பத்தியைத் தொடங்கும்
என்று தாங்கள் அறிவித்திருப்பது எனக்கு
ஆச்சரியத்தைத் தந்துள்ளது.
உள்ளூர் மக்கள் அச்சம் போக்கப்
படும்வரை கூடங்குளத்தில் பணிகள்
நிறுத்தப்பட வேண்டும் என எங்கள்
அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
அதனை அடுத்து தமிழ்நாடு நிதியமைச்சர்
தலைமையில் தங்களைச் சந்தித்த குழுவினர்
அளித்த மனுவினைத் தொடர்ந்து மத்திய
அரசானது நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.
உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து
எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்
குறித்து அந்தக் குழு விளக்கும் என கூறப்
பட்டதை நான் நினைவுப்படுத்த விரும்பு
கிறேன்.
மாநில அரசானது தனது அதிகாரிகள்
மூலம் உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை
களை நடத்தி வருகிறது.
அந்தப் பகுதி மக்களின் திருப்தி என்பது
எனது அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் மிக மிக
முக்கியமான ஒன்றாகும்.
எனவே மக்களின் அச்சத்தைப் போக்கத்
தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு
எடுக்க வேண்டும். அங்கே எந்தப் பணி
களையும் தொடங்குவதற்கு முன்னர்
மக்களின் அச்சத்தைப் போக்கி திருப்தியடை
யச் செய்வது மிகவும் அபசியமானதும்,
கண்டிப்பானதும் ஆகும்.
இவ்வாறு முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் பிரதமர் மன்மோகன்
சிங்குக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்
ளார்கள்.

No comments:

Post a Comment