எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Saturday, December 17, 2011

வரும் 30-ந் தேதி கழக செயற்குழு-பொதுக்குழு கூட்டம்

சென்னை-வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில்
வரும் 30-ந் தேதி கழக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் கழகப் பொதுச்செயலாளர்-முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு


சென்னை, டிச. 15-
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30.12.2011-
வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு, சென்னை, வானகரத்தில்
உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும் என
கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
அறிவித்துள்ளார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத்தலைவர் திரு. இ.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறும். கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுச்செயலாளர் அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் தமிழ்நாடு முதலமைச்சர்.

No comments:

Post a Comment