முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அவசரகால
நடவடிக்கையாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிபுணர்கள் குழுவை
அமைத்திருப்பது தேவையற்றது என்றும் அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
என்றும் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பிரதமர் மன் மோகன்
சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்கள். முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
உங்களுடைய தலைமையின் கீழ் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், நில
அதிர்வு, வெள்ளம் ஆகியவை தனித்தனியாக அல்லது சேர்ந்து வருகிற போது, நீரில்
மூழ்குவததற்கான / நீரால் சூழப்படுவதற்கான மாதிரிகளை உருவாக்கும்
நோக்கத்துடன், எதிர்பாரா இடர் காப்பு திட்டம் ஒன்றை உருவாக்குவற்காக,
12.12.2011 அன்று வல்லுநர்கள் குழு ஒன்றை அமைத்திருப்பது குறித்து நான்
அதிர்ச்சி அடைந்தேன். கேரள அரசின் உபயோகத்திற்கு இணங்குவதற்காகவும்,
இந்திய உச்ச நீதிமன்றத்திற்கும், அதனால் அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட
குழுவிற்கும், செய்து முடிக்கப்பட்ட செயல் ஒன்றைத் தெரிவிப்பதற்காகவும்
மட்டுமே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது-. பல்வேறு வல்லுநர்களின் அறிக்கைகளை
பரிசீலித்த பின்னர், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று
இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே முடிவெடுத்து, தொடக்கத்தில்,
நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசுக்கு
அனுமதியளித்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்திய உச்ச
நீதிமன்றத்தால் அமைக் கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழு, பல்வேறு சோதனைகளை
நடத்தியது. ஏனைய பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அது, இந்திய உச்ச
நீதிமன்றத்திடம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு
கடிதம்...அதனுடைய அறிக்கையை 2012 பிப்ரவரியில் அளிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.-நிலைமை இவ்வாறிருக்க, கேரள அரசு சட்ட நடவடிக்கையை
தந்திரமாக வெற்றி கொள்வதற்காக பேரிடர் ஏற்படுகிற நேர்வில், எதிர்பாரா இடர்
காப்பு திட்டம் ஒன்றை உருவாக்குவதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை
யத்தை அணுகியது. அது, ஒரு கற்பனைக்
கதையே ஆகும். அணை பாதுகாப்பற்றது என்று
அதிகாரமளிக்கப்பட்ட குழு அறிவிக்குமாறு
செய்வதற்காக, அக்குழுவை வலியுறுத்துவ
தற்காக கேரள அரசு மேற்கொண்ட ஒரு
திட்டமிட்ட முயற்சியாகவே இது தோன்று
கிறது.ரூர்க்கி, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின்
நில அதிர்வு பொறியியல் துறையைச் சேர்ந்த
பேராசிரியர் டி.கே.பால், நிலுவையாக உள்ள
வழக்கில் ஓர் சாட்சியாக, கேரள அரசால் முன்
மொழியப்பட்டார் என்பதையும் நான் உங்க
ளுடைய கவனத்திற்குக் கொண்டு வர விழை
கிறேன். அவரை, ஓர் சாட்சியாக சேர்க்க வேண்
டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை
இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
தற்போது, தேசிய பேரிடர் மேலாண்மை
ஆணையம், ரூர்க்கி இந்திய தொழில் நுட்ப
நிறுவனத்தின் நில அதிர்வு பொறியியல்
துறையின் சார்பில் பேராசிரியர் டி.கே.பாலை,
வல்லுநர்கள் குழுவில் சேர்த்துள்ளது. அவருடைய
ஆய்வு செய்யப்படாத கருத்துக்கள், தேசிய
பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்
வல்லுநர்களை, விரும்பத்தக்காத வகையில்
ஈர்ப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும்
உள்ளன.இந்த விவகாரம், இந்திய உச்ச நீதிமன்றத்தில்
நிலுவையாக உள்ள நிலையிலும், உச்ச நீதி
மன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்
பட்ட குழு, அணையின் பாதுகாப்பு உட்பட
பல்வேறு அம்சங்கள் குறித்து பரிசீலித்து
வருகிற நிலையிலும், முல்லைப் பெரியாறு
அணை மற்றும் அதன் நீரோட்டத் திசையிலுள்ள
பகுதிகளுக்கான எதிர்பாரா இடர்காப்பு
திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக, தேசிய
பேரிடர் மேலாண்மை ஆணையம், வல்லுநர்களின்
குழு ஒன்றை, இந்த நிலையில் அமைப்பது
தேவையற்றது என்று நான் கருதுகிறேன்.
எனவே, தேசிய பேரிடர் மேலாண்மை
ஆணையத்தின் 12.12.2011ஆம் நாளிட்ட 5-72/2011
விவீ ஆம் எண்ணுள்ள அலுவலகக் குறிப்பா
ணையை, உடனடியாக திரும்பப் பெறுவதற்கு
ஆணை பிறப்பிக்குமாறு நான், உங்களை
கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர்புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள
கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
யத்தை அணுகியது. அது, ஒரு கற்பனைக்
கதையே ஆகும். அணை பாதுகாப்பற்றது என்று
அதிகாரமளிக்கப்பட்ட குழு அறிவிக்குமாறு
செய்வதற்காக, அக்குழுவை வலியுறுத்துவ
தற்காக கேரள அரசு மேற்கொண்ட ஒரு
திட்டமிட்ட முயற்சியாகவே இது தோன்று
கிறது.ரூர்க்கி, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின்
நில அதிர்வு பொறியியல் துறையைச் சேர்ந்த
பேராசிரியர் டி.கே.பால், நிலுவையாக உள்ள
வழக்கில் ஓர் சாட்சியாக, கேரள அரசால் முன்
மொழியப்பட்டார் என்பதையும் நான் உங்க
ளுடைய கவனத்திற்குக் கொண்டு வர விழை
கிறேன். அவரை, ஓர் சாட்சியாக சேர்க்க வேண்
டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை
இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
தற்போது, தேசிய பேரிடர் மேலாண்மை
ஆணையம், ரூர்க்கி இந்திய தொழில் நுட்ப
நிறுவனத்தின் நில அதிர்வு பொறியியல்
துறையின் சார்பில் பேராசிரியர் டி.கே.பாலை,
வல்லுநர்கள் குழுவில் சேர்த்துள்ளது. அவருடைய
ஆய்வு செய்யப்படாத கருத்துக்கள், தேசிய
பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்
வல்லுநர்களை, விரும்பத்தக்காத வகையில்
ஈர்ப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும்
உள்ளன.இந்த விவகாரம், இந்திய உச்ச நீதிமன்றத்தில்
நிலுவையாக உள்ள நிலையிலும், உச்ச நீதி
மன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்
பட்ட குழு, அணையின் பாதுகாப்பு உட்பட
பல்வேறு அம்சங்கள் குறித்து பரிசீலித்து
வருகிற நிலையிலும், முல்லைப் பெரியாறு
அணை மற்றும் அதன் நீரோட்டத் திசையிலுள்ள
பகுதிகளுக்கான எதிர்பாரா இடர்காப்பு
திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக, தேசிய
பேரிடர் மேலாண்மை ஆணையம், வல்லுநர்களின்
குழு ஒன்றை, இந்த நிலையில் அமைப்பது
தேவையற்றது என்று நான் கருதுகிறேன்.
எனவே, தேசிய பேரிடர் மேலாண்மை
ஆணையத்தின் 12.12.2011ஆம் நாளிட்ட 5-72/2011
விவீ ஆம் எண்ணுள்ள அலுவலகக் குறிப்பா
ணையை, உடனடியாக திரும்பப் பெறுவதற்கு
ஆணை பிறப்பிக்குமாறு நான், உங்களை
கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர்புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள
கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment