கழக நிறுவனத் தலைவர் பாரத் ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 24-வது ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையிலுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மலர் வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தினார்கள். இதில் பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. கலை உலகிலும், அரசியல் வானிலும் முடி சூடா மன்னனாக தனக்கென்று ஒரு இடத்தை
நிரந்தரமாகப் பிடித்த புரட்சித்-தலைவர்
டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்து 23
ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நேற்று (24ந்
தேதி) அவர் மறைந்த 24ஆவது ஆண்டு நினைவு
நாள் ஆகும். இதுகுறித்து தலைமைக் கழகம் ஏற்கெனவே
வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியிருந்ததாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்
னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய
தெய்வம் ?பாரத் ரத்னா? புரட்சித்தலைவர்
டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் நம்மை
ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு
அமரர் ஆகிய நாள் 24.12.1987. அவரது 24-ஆவது
ஆண்டு நினைவு நாளான 24.12.2011 சனிக்கிழமை
அன்று காலை 10.30 மணிக்கு சென்னை
மெரினா கடற்கரையில் அமைந்துள்ள
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.
அவர்களுடைய நினைவிடத்தில், அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப்
பொதுச் செயலாளர் முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் மலர் வளையம்
வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து, அவரது நினைவிட
வளாகத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
நடைபெற உள்ளது என்றும் தலைமைக்கழகம்
தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு,
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்-
துள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.
நினைவிடத்தில் கழகப் பொதுச் செயலாளர்,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி
செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து
அவரது நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்-
டிருந்த மேடையில் உறுதி மொழி ஏற்பு
நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள்,
அமைச்சர் பெருமக்கள், கழக நாடாளுமன்
ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தின்
சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பல்வேறு
அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும்,
உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக
உடன் பிறப்புகளும் பல்லாயிரக்கணக்கில்
கலந்துகொண்டனர்.
முன்னதாக சென்னை மெரினா கடற்க
ரையில் உள்ள அமரர் புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்து-
வதற்காக அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்
கான தொண்டர்களும், பொதுமக்களும்
திரண்டு வந்தனர். மெரினா கடற்கரையில்,
கலங்கரை விளக்கம் முதல் எம்.ஜி.ஆர்.
நினைவிடம் வரை எங்கு பார்த்தாலும் மனித
தலைகளாகவே தென்பட்டது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி
செலுத்த வந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் கார், மக்கள் வெள்ளத்
தில் ஊர்ந்து சென்றது. பின்னர், புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மலர் வளையம்
வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் உறுதிமொழி ஏற்பு மேடையில்
அமரர் எம்.ஜி.ஆர். பற்றிய நினைவுகளை
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்
டாக்டர் பி.எச்.பாண்டியன் நினைவுகூர்ந்து
பேசினார். இதனைத் தொடர்ந்து, கழகப் பொரு
ளாளரும், நிதியமைச்சருமான ஒ.பன்
னீர்செல்வம் உறுதிமொழியினை வாசிக்க,
அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழகம் முழுவதும் புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைகளுக்கும் மற்றும்
திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து
நினைவஞ்சலி செலுத்தி அன்னதானம்
உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை கழகத்தினர்
செய்திருந்தனர்.
No comments:
Post a Comment