அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தவர்
குடும்பத்துக்கு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ரூ.1 லட்சம்
நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- 21.12.2011
அன்று ஈரோட்டிலிருந்து பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து,
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சித்தராவுத்தான்பாளையம் கிராமம்,
பொள்ளாச்சி ரோடு அமராவதி சிலை அருகில் இருசக்கர வாகனம் மீது மோதியதில்
வரப்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரது மகன் ரவி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.
இவ்விபத்தில் அகால மரணமடைந்த ரவி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த
இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ரவியை இழந்து
வாடும் அவர்தம் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து
ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment