ஆட்சிக்கு வந்த 4 நாட்களிலேயே திருப்பூர் சாய -சலவைப் பட்டறை குறித்து ஆய்வு
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய சுத்திகரிப்பு கருவிகளை நிறுவிட
திருப்பூரிலுள்ள 15 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரூ. 127.40 கோடி வட்டியில்லா கடன்: முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ஆணை விவசாயிகள், சாய-சலவைப் பட்டறைகளின் பிரச்சினையை முற்றாக தீர்க்க நடவடிக்கை
சென்னை, டிச. 17-
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய சுத்திகரிப்பிற்கான கருவிகளை
நிறுவிட திருப்பூரிலுள்ள 15 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ. 127 கோடியே 40 லட்சத்தை வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்மூலம் விவசாயிகள் மற்றும் சாய-சலவைப் பட்டறைகளின் பிரச்சினைகள் முற்றாக தீர முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு வருமாறு:- திருப்பூர் பகுதியிலுள்ள 754 சலவை மற்றும்சாயத் தொழிற்சாலைகள் மற்றும் 20 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளி-யேற்றப்படும் சாயக் கழிவு நீர், நொய்யல் ஆற்று வழியாக சென்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓரத்துப்பாளையம் அணையில் பாசன நீருடன் கலந்து, அங்குள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக, நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், மாசு ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க 1998-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட பின்னரும், வெளியேற்றப்படும் கழிவு நீரால் பாதிப்பு ஏற்பட்டதால், 2003-ஆம் ஆண்டு, நொய்யல் ஆறு பாசனதாரர்கள் பாதுகாப்பு சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தது. 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதி-மன்றம் தனது தீர்ப்பில், 31.7.2007-க்குள் சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் கழிவு நீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை அடைய வேண்டும் என்றும், அவ்வாறு அடையப்படவில்லை எனில், சலவை மற்றும் சாயத் தொழிற்சாலகள் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில், தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்ற ஆணைக்கு தடை உத்தரவுபெற்றது. உச்ச நீதிமன்றம் 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வழங்கிய தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்து, 3 மாத காலத்திற்குள் கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை அடைய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலை எட்டப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, 28.1.2011 நாளிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி, திருப்பூர் பகுதியில் உள்ள 754 சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் 1.2.2011 முதல் மூடப்பட்டன. திருப்பூர் பகுதியில் உள்ள சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், திருப்பூர் பகுதி ஜவுளித் தொழில் முடங்கிப்-போனது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். கழிவுநீர் வெளியேற்றல் பூஜ்ஜிய நிலையை அடைந்தால் ஜவுளித் தொழில் பாதுகாக்கப்படுவதோடு, விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்படும் என்பதால், ஆட்சியில் பொறுப்பேற்ற நான்கு நாட்களிலேயே இப் பிரச்சினைக்கு ஒரு சுமுக முடிவு காμம் வகையில் மே மாதம் 19-ஆம் தேதியே அனைத்து தரப்பினரையும் அழைத்து முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள். இதன் பின்னர், அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையில் மீண்டும் 28.7.2011 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அருள்புர நிறுவனத்தால்கையாளப்படும் சோதனை முறை அல்லது குஜராத் பாருச் என்னுமிடத்தில் கையாளப்படும் நானோ தொழில் நுட்பம் முறை இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சுத்திகரிப்பு நிலையங்கள் கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜியநிலையை எட்டவேண்டும் எனவும், இதற்கான நவீன தொழிநுட்பங்களை பயன் படுத்தவும், அதற்கான உபகரணங்களை வாங்கு வதற்காகவும், ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலையத்திற்கும், 10 கோடி ரூபாய் தேவைப்தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை 16.12.2011 அன்று தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி, தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற ?மாறிவருகிற பருவநிலை குறித்த கருத்தரங்கில்? கலந்துகொண்டு சென்னை திரும்பியதையட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றார். படும் என்பதால் மொத்தத்தில் 200 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கவும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சுத்திகரிப்பு நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய சுத்திகரிப்பிற்கான கருவிகளை நிறுவிட, திருப்பூரிலுள்ள ஆண்டிப்பாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 8 கோடி ரூபாய், அங்கேரிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், சின்னக்கரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், எஸ்டர்ன் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், கள்ளிக்காடு பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 8 கோடி ரூபாய், காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 7 கோடியே 96 லட்சம் ரூபாய், கரைப்புதூர் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 9 கோடியே 10லட்சம் ரூபாய், மங்கலம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 9 கோடியே 55 லட்சம் ரூபாய், மண்ணரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 9 கோடியே 32 லட்சம் ரூபாய், பார்க் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 6 கோடியே 73 லட்சம் ரூபாய், பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 5 கோடியே 1 லட்சம் ரூபாய், சிறுபூலுவபட்டி பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், திருப்பூர் முருகம்பாளையம் பொது சுத்திகரிப் பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய்,வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், வேட்டுபவபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 3 கோடியே 73 லட்சம் ரூபாய், என 15 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 127 கோடியே 40 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.முதலமைசசர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இந்த நடவடிக்கைகளினால் சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதுமாக கட்டுப்ப டுத்தப்பட்டு பூஜ்ஜிய நிலையை எட்டுவதற்கு வழி ஏற்படும். இதனால் வெகுநாட்களாக விவசாயிகள் மற்றும் சலவை மற்றும் சாயப்பட் டறை தொழிற்சாலைகளின் பிரச்சனைகள் முழுவதுமாக தீர்க்கப்பட்டுவிடும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான சாயப்பட்டறை தொழிலாளர்கள் பயன்பெறுவர். விவசாயிகளின் நலன்களும் முழுவதுமாக பாதுகாக்கப்படும்.இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment