எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Saturday, December 31, 2011

பணபலம்-படைபலம்-அதிகாரபலத்தை முறியடித்து வீரமங்கையாய் சுழன்று பணியாற்றி சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கழகத்திற்கு மகத்தான வெற்றியைத் தேடித்தந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவுக்கு நன்றி! பாராட்டு! கழக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பணபலம், படை பலம், அதிகார பலத்தை முறியடித்து, தேர்தல் களத்தில் வீரமங்கையாய் சுற்றிச் சுழன்று பணியாற்றி சட்டமன்றத் தேர்தலில் கழகத்திற்கு மகத்தான வெற்றியைத் தேடித்தந்த கழகப் பொதுச்செயலாளர், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு கழகப் பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து மகிழ்கிறது. சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முன்னிலையில் நேற்று பிற்பகல் 2.00 மணி அளவில் நடைபெற்ற கழக செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-தீர்மானம்-2 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகத்திற்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்த, கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி! தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், தீய சக்தி கருணாநிதி தலைமை யிலானகூட்டணியின்பணபலம், படை பலம், அதிகார பலம் ஆகியவற்றை முறியடித்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தன்னுடைய அரசியல் மதி நுட்பத்தின் மூலம் அற்புதமான தேர்தல் வியூகங்களை வகுத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிச் சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். ஓய்வு, உறக்கம் இன்றி, ஒவ்வொரு நாளும் பல நூறு மைல்கள் பயணம் செய்து, கடுமையான கோடையையும் பொருட் படுத்தாமல், அனைத்து இன்னல்களையும் தானே ஏற்றுக்கொண்டு, போர்க்களமாய் இருந்த தேர்தல் களத்தில், வீர மங்கையாய் சுற்றிச் சுழன்று பணியாற்றினார் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தேர்தல் களத்தில் கண்ணியம் காத்து, தன்னுடைய சொல் ஆற்றல் வழியாக அராஜக தி.மு.க.ஆட்சியின்அவலங்களையும்,மத்தியஅரசில் பங்கு கொண்டு தி.மு.க. நடத்தி வரும் மிகப் பெரிய ஊழல்களையும் மக்கள் கவனத்திற்கு கொண்டு சென்று,விடுதலை பெற்றஇந்தியாவில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு தேர்தல் களத்தில் ஒரு எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கினார் நம் ரட்சித் தலைவி அம்மாஅவர்கள்.இத்தகைய உழைப்பின் மூலம் கழகத்திற்கு
வெற்றியை ஈட்டித் தந்து, நம்மையெல்லாம்தலைநிமிரச் செய்த ?தங்கத் தாரகை? இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாஅவர்களுக்கு இந்தப் பொதுக்குழு தனதுநெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும்
தெரிவித்து மகிழ்கிறது.முன்மொழிபவர்: திரு. இ. மதுசூதனன் அவர்கள் கழக அவைத் தலைவர்
வழிமொழிபவர்கள்:அனைத்துப் பொதுக்குழு

No comments:

Post a Comment