புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பயிலும் 46 லட்சத்து
85 ஆயிரத்து 78 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 4 இணை சீருடைகளை ரூ.
259.95 கோடியில் வழங்கவும், 94.76 கோடி செலவில் 81 லட்சத்து 2 ஆயிரத்து
128 மாணவ-மாணவிகளுக்கு ஒரு இணை காலணிகளை வழங்கவும் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். புத்தகப் பைகள், ஜாமெட்ரி
பாக்ஸ், வண்ணப் பென்சில்கள், வரைபடங்கள் ரூபாய் 136.50 கோடியில் வழங்கவும்
உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு
வருமாறு:
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை" என்ற வள்ளுவரின்
வாக்கிற்கு ஏற்ப கல்வியே மிகச் சிறந்த செல்வம்
என்று சொன்னால் அது மிகையாகாது.
கல்வியானது நற்பண்புகளையும், நல்ல
குறிக்கோள்களையும் குழந்தைகளிடையே
விதைத்து அவர்களை சமுதாய உணர்வு உள்ள
நல்ல குடிமக்களாக உருமாற வழிவகை செய்கிறது.
இதனை நன்கு உணர்ந்த முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மாநிலத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தரமான
கல்வியை, அடிப்படை உள்கட்டமைப்பு
வசதிகள் நிறைந்த இன்பமான சூழ்நிலையில்
பெறுவதற்கான பல்வேறு முன்னோடி
நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
முழுக்கால் சட்டை - சல்வார் கமீஸ்
இதன் அடிப்படையில் 2012-13ஆம் கல்வியாண்
டு முதல் தொடக்கக் கல்வி மற்றும்
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும்
பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப்
பள்ளிகள் ஆகியவற்றில் புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 1வது
வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும்
மாணவ-மாணவிகளுக்கு, தற்பொழுது
வழங்கப்பட்டு வரும் இரண்டு இணை சீருடையுடன் கூடுதலாக இரண்டு இணை சீருடை
அதாவது மொத்தம் நான்கு இணை சீருடை
வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதில் 6ஆம்
வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும்
மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு
பதிலாக முழுக் கால்சட்டையும்,
மாணவியர்களுக்கு பாவாடை தாவணிக்குப்
பதிலாக சல்வார்-கமீசும் வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம் 23 லட்சத்து
33 ஆயிரத்து 418 மாணவர்களும், 23 லட்சத்து
51 ஆயிரத்து 660 மாணவிகளும் என மொத்தம்
46 லட்சத்து 85 ஆயிரத்து 78 பள்ளி மாணவ,
மாணவியர் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு
259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதல்
செலவு ஏற்படும்.

No comments:
Post a Comment