எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 13, 2012

பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்.

காத்திருப்போர் பட்டி
யல் மேலும் அதிகரித்தால்
பொங்கல் பண்டிகைக்கு
கூடுதல் ரயில்கள் இயக்கப்
படும் என்று சென்னை
கோட்டரயில்வேமேலாளர்
அனந்தராமன் கூறினார்.
தெற்கு ரயில்வே மத்திய
மாவட்டத்தைச் சேர்ந்த
சாரண மற்றும் சாரணியர்
சார்பில் ரயில்வே பாது
காப்பு விழிப்புணர்வு சைக்
கிள் பேரணி தொடக்க
நிகழ்ச்சி சென்னை சென்டி
ரல் ரயில் நிலையத்தில்
நடைபெற்றது.
பேரணியை சென்னை
கோட்ட ரயில்வே மேலா
ளர் கொடி அசைத்து
தொடங்கி வைத்து பேசி
னார். இணை மேலாளர்
ஜான்தாமஸ் முன்னிலை
வகித்தார். 50க்கும் மேற்
பட்ட சாரணசாரணி
யர்கள் இதில் கலந்து
கொண்டனர்.சென்டிரலில்
தொடங்கிய இந்த சைக்கிள்
பேரணி தாம்பரம், செங்
கல்பட்டு, அரக்கோணம்,
காஞ்சீபுரம், காட்பாடி,
ஆம்பூர் வழியாக ஜோலார்
பேட்டையை வருகிற 13ந்
தேதி சென்றடைகிறது.

No comments:

Post a Comment