எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, January 17, 2012

பொங்கல் திருநாளையட்டி காவல்துறை-தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை-சிறைத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 1686 பேருக்கு முதலமைச்சரின் சிறப்புப் பணி பதக்கம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு

பொங்கல் திருநாளையட்டி தமிழக
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்
பணிகள் துறை, சிறைத்துறை ஆகிய வற்றில்
சிறப்பாக பணிபுரிந்த 1686 பேருக்கு முதல
மைச்சரின் சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்
படும் என முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2012-ஆம்ஆண்டுபொங்கல் திருநாளையட்டி,
தமிழகக் காவல் துறையில் பணியாற்றும்
காவலர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும்
அதற்குச் சமமான பதவியில் உள்ளவர்கள் என
மொத்தம் 1500 பேருக்கு 'தமிழக முதலமைச்சரின்
காவலர் பதக்கம்' வழங்கப்படும் என்றும்,
இப்பதக்கம் பெறுவோர் ஒவ்வொருவருக்கும்
2012 பிப்ரவரி முதல் மாதாந்திரப்படியாக 100
ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
ஆணையிட்டுள்ளார்கள்

No comments:

Post a Comment