எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, January 12, 2012

தானே? புயலால் பாதிக்கப்பட்ட 3.50 லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை திரும்பப் பெற 2.24 லட்சம் ஹெக்டேர் பரப்பில் முற்றிலும் சேதமடைந்த வேளாண்-தோட்டக் கலை பயிர் இழப்புகளுக்காக ரூ. 210 கோடி நிவாரண உதவித் தொகை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு

தானே? புயலால் பாதிக்கப்பட்ட 3.45 லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை திரும்பப்
பெற 2.24 லட்சம் ஹெக்டேர் நிலப் பரப்பில் பயிரிடப்பட்ட, முற்றிலும் சேதமடைந்த பயிர்இழப்புகளுக்காக மட்டும் ரூ. 210 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும்,முற்றிலும் சேதமடைந்த தோட்டக்கலை பயிர்களுக்கு மீண்டும் பயிர் செய்வதற்கு விலைஏதுமின்றி மரக்கன்றுகளும், ஓராண்டு காலத்திற்கு பராமரிப்பு மற்றும் விவசாயபணிகளுக்கான செலவுகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர்புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அறிக்கை வருமாறு:-
30.12.2011அன்றுபுதுச்சேரிக்கும் கடலூருக்கும்
இடையே கரையைக் கடந்த ?தானே? புயல்
தமிழகத்தை தாக்கி, கடலூர் மற்றும் விழுப்புரம்
மாவட்டங்களில் மிகப் பெரும் சேதத்தை
ஏற்படுத்திச் சென்றுவிட்டது. இந்தப் புயலின்
கோரத் தாக்குதல் காரணமாக, கடலூர் மற்றும்
விழுப்புரம் மாவட்டங்களின் அடிப்படை
கட்டமைப்புகள் முற்றிலும் சீரழிந்துவிட்டன.
குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் மின்சார வசதி
ஆகியவை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சுமார் 4 லட்சம் குடிசை மற்றும் ஓடு வேய்ந்த
வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதனையடுத்து, அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்
டு, சீரமைப்புப் பணிகள் போர்க்கால
அடிப்படையில்,முழுவீச்சில்நடைபெற்றுவருவதால்,
மக்களுக்குத் தேவையான குடிநீர் எவ்வித
இடையூறும்இன்றிவழங்கப்பட்டுவருகிறது.கடலூர்
மாவட்டம் முழுமைக்கும் புதிதாக மின்னமைப்பு
ஏற்படுத்துவது போல உள்ள சவாலானபணியை
மின்சார வாரியம் செம்மையாக செய்து வருகிறது.
மின்சார வசதியை சீரமைக்கும் பணியில் 3,000
பணியாளர்கள் அல்லும் பகலும் அயராது
பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 5,000
பணியாளர்கள் மின்சார சீரமைப்புப்பணிகளில்
ஈடுபடுத்தப்பட உள்ளனர். மின்சார கட்டமைப்
புக்கு ஏற்பட்ட இது போன்ற பேரழிவை
சீர்செய்ய குறைந்தது 6 மாத காலம் ஆகும்
என்ற போதிலும், எனது தலைமையிலான
அரசின் இடைவிடாத முயற்சியினால், கடலூர்
மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள
அனைத்து வீடுகளுக்கும் பொங்கல் திரு
நாளுக்குள் மின் வசதி வழங்கிட நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.
?தானே? புயல் காரணமாக தமிழ்நாட்டில்
சுமார் 1.76 லட்சம் ஹெக்டேர் பரப்பில்
பயிரிடப்பட்ட வேளாண் பயிர்களும், 0.48 லட்சம்
ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட தோட்டக்
கலை பயிர்களும், ஆக மொத்தம் 2.24 லட்சம்
ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்கள்
முற்றிலும் சேதமடைந்துள்ளன.இதன்விளைவாக,
விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டு அவர்களது பொருளாதார நிலை
வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனைக் கருத்தில்
கொண்டு பயிர் சேதங்களுக்கு மத்திய அரசின்
பேரிடர்நிவாரணவரையறையில்குறிப்பிட்டுள்ளதை
விட அதிகமான நிவாரணத் தொகை வழங்க
நான் ஆணையிட்டுள்ளேன். பயிர் இழப்புகளுக்
காக மட்டும் 210 கோடி ரூபாய் அளவுக்கு
நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு பயிர் சேதங்களுக்காக நிவாரண
உதவித் தொகைகள் வழங்கப்பட்டாலும், பலா,
முந்திரி போன்ற தோட்டப் பயிர்களின் மூலம்
வருவாய் ஈட்டி வந்த விவசாயப் பெருங்குடி
மக்களின் துயர் துடைத்திட இயலாது. எனவே,
புயல் காரணமாக பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு
ஒரு நிவாரணதொகுப்புஉதவிவழங்க நான்முடிவு
செய்துள்ளேன்.

No comments:

Post a Comment