எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, January 19, 2012

வணிக பரிமாற்றங்களுக்கு ஏற்ப துறையின் செயல்திறனை அதிகரிக்க வணிக வரித்துறையின் அனைத்து பணிகளையும் ரூ.231 கோடியில் கணினிமயமாக்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஆணை.

வணிகப் பரிமாற்றங்களுக்கு ஏற்ப
துறையின் செயல்திறனை அதிகரிக்க
வணிக வரித்துறையின் அனைத்துப்
பணிகளையும் ரூ.230.96 கோடியில்
கணினி மயமாக்க முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுதொடர்பான தமிழக அரசின்
செய்திக்குறிப்பு வருமாறு:
மக்களுக்கான திட்டங்களையும், வளர்ச்சிப்
பணிகளையும் வலுவான நிதி ஆதாரங்கள்
மூலம் தான் செயல்படுத்த முடியும். மாநில
அரசின் வரிவசூல் மூலம் ஈட்டுகின்ற நிதி
ஆதாரத்தைக் கொண்டு பல்வேறு நலத்
திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநிலத்தின் மொத்த வருவாயில் மூன்றில்
இரண்டு பங்கினை ஈட்டித்தருவது வணிகவரித்
துறையாகும். இதன் மூலம் மாநிலத்தின்
வளர்ச்சிக்கும் மற்றும் மக்கள் நலத் திட்
டங்களுக்கும் தேவையான நிதி ஆதாரங்களை
திரட்டுவதில் இத்துறை முக்கியமான பங்கு
வகிக்கிறது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த
வணிகவரித்துறையின் பணிகளில் அடிப்
படைப் பணிகள் மட்டுமே கணினிமயமாக்
கப்பட்டுள்ளன. இதனை உணர்ந்த தமிழக
முதலமைச்சர் புரட்சித்தலைவி அவர்கள்
தற்போது பெருகி வரும் வணிக பரிமாற்றங்க
ளுக்கு ஏற்ப துறையின் செயலாக்கத்திறன்
அதிகரிக்கப்பட வேண்டும் என்பதைக்
கருத்தில் கொண்டு, இத்துறையின் அனைத்து
பணிகளையும் முழுவதுமாக கணினிமயமாக்
க உத்தரவிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment