எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, January 1, 2012

சாலை பயன்படுத்துவோருக்கு இந்த ஆண்டு பாதுகாப்பான பயண ஆண்டாக விளங்கட்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா சாலைப் பாதுகாப்பு வார வாழ்த்துச் செய்தி

சாலை பயன்படுத்துவோருக்கு இந்த ஆண்டு பாதுகாப்பான பயண ஆண்டாக விளங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சாலைப் பாதுகாப்பு வாழ வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சாலைப் பாதுகாப்பு வார வாழ்த்துச் செய்தி வருமாறு- பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஆண்டுதோறும் சனவரி மாதம் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக அரசால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சாலைப் பாதுகாப்பு வாரத்தின் கருப்பொருள்.?விபத்தினால் வருவது துன்பம்-பாதுகாப்பினால் வருவது இன்பம்? ஆகும். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பல்வேறு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், சாலை விபத்துகளை தவிர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சாலைப் பாதுகாப்பு நிதியின் கீழ் 40 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. சாலைப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சாலைப் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப் படுவதை ஊக்குவிக்கும் வகையில், பொது மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் வண்ணம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு செயல்முறைத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில், கனரக வாகன ஓட்டுநர்களுக்கு, அவர்கள் தங்களது செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அவ்வப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்களின் வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களைக் கண்காணிக்க கண்காணிப்பு நிழற்படக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. விவேகமற்ற மரணங்கள் காரணமாக பொருளீட்டும் நபர்களை குடும்பங்கள் இழக்கின்றன. படுகாயங்களின் விளைவாக பலவீனம் ஏற்பட்டு வாழ்க்கைத் தரம் முற்றிலும் பாதிக்கப்படுவதன் காரணமாக அந்த குடும்பங்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாக்கப்படுகின்றன. விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த வகையில்,  அடிக்கடி விபத்துகள் நிகழும் இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் சாலைகள், பாலங்கள், சிறு பாலங்கள் ஆகியவற்றை அகலப்படுத்துதல், வேகத் தடைகளை பொருத்துதல், போதுமான மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்துதல், சாலை சந்திப்புகளில் அடையாளக் குறிகளை காட்டும் பலகைகளை அமைத்தல், சாலை வளைவுகளை நேர் செய்தல் என பல்வேறு தீர்வு காμம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர கால மருதுவ சேவை அளிப்பதில அவசர விபத்து நிவாரண மையங்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துக் குழுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. சாலைப் பயன்படுத்துவோர் அனைவரும்விபத்தில்லாமல் பாதுகாப்பாகபயணம்செய்வதை உறுதி செய்வதையும், சாலைப் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துக் கூறுவதையும் குறிக்கோளாகக் கொண்டு சாலைப் பாதுகாப்பு வாரம்  அனுசரிக்கப்படுகிறது-இவைஅனைத்திற்கும்மேலாக, ஒழுக்கம் மற்றும் சாலை விதிகளை கடுமையாக கடைபிடித்தல் மட்டுமே, இழப்பையும், துயரத்தையும் குறைக்க உதவும். சாலை பயன்படுத்துவோருக்கு இந்த ஆண்டு பாதுகாப்பான பயண ஆண்டாக விளங்கட்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment