எழிலகம் பின்புறம் உள்ள அரசு கட்டிடத்தில்
ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு இயங்கி வந்த சமூக நலத்துறை அலுவலகம்
எழும்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை எழிலகம்
பின்புறம் உள்ள அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்
அங்கிருந்த கணிபொறிகள், அரசின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து
சாம்பலாயின. இங்கு சமூக நலத்துறை, சத்துணவுத் துறை வணிகத்துறை ஆகிய மூன்று
துறைகளின் தலைமை அலுவலகங்களும் இயங்கி வந்தன. இதற்கு அருகில் தொழிற்
சாலைகளின் ஆய்வுத்துறை உள்ளது. அங்கு தீ பரவு வதற்குள் தீயணைப்
புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பொங்கல் விடுமுறை முடிந்து
அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அலுவலகம் முழுவதும் தீயினால்
பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்து வேதனை அடைந்தனர். பின்னர் அனைவரும் தங்கள்
பணியை எங்கே செய்வது என தெரியாமல் உயர் அதிகாரிகளின் உத்தரவிற்காக அங்கே
காத்திருந்தனர். காலை சுமார் 10 மணி அளவில் அவர்களுக்கு மாற்று இடம்
ஒதுக்கப்பட்டதாக தகவல் தரப்பட்டது. இதையடுத்து, அவர்கள் புதிய இடத்திற்கு
பணியாற்ற கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment