தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உத்தரவுப்படி அமைச்சர்கள்
உடனடி நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஆய்வு
மேற்கொண்ட அமைச்சர் எம்.சி.சம்பத், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக
நிவாரண உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 40 டேங்கர் லாரிகள்
மூலம் குடி தண்ணீர் வழங்கவும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம்
மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மரக்காணம், சின்னமுதலியார் சாவடி
உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நிவாரணப் பணிகளை
மேற்கொண்டார்.அதன்படி, பாதிக்கப் பட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
பள்ளி மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment