எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 27, 2012

63வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ரோசையா கழக அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகள், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி என களைகட்டியது.

இந்திய திருநாட்டின் 63வது குடியரசு தின
விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னையில் முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் முன்னிலையில் ஆளுநர் கே. ரோசையா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
63வது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் மெரீனா
கடற்கரை காந்தி சிலை அருகே நடை பெற்றது.
தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில்
நடைபெற்ற வண்ணமிகு விழாவில் கலந்துகொள்வதற்காக
போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்பட்ட
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை,
சென்னை காவல்துறை போக்குவரத்து காவலர்கள்
இருசக்கர வாகன அணிவகுப்பு மரியாதையுடன்
அழைத்து வந்தனர். காமராஜர் சாலையின் இருமருங்கிலும்
திரண்டிருந்த மக்களின் வரவேற்பை முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை
தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி வரவேற்று
விழா மேடைக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் விழா மேடைக்கு வந்த ஆளுநர் ரோசையாவை,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
வரவேற்று, முப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறை
உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் முன்னிலையில், ஆளுநர் ரோசையா
தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு
மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment