எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, January 10, 2012

திருப்பூர்-கரூர் மாவட்ட வேளாண் பெருமக்களின் கோரிக்கைகளை ஏற்று அமராவதி அணையிலிருந்து புதிய-பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைகளை ஏற்று, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், அமராவதி அணையிலிருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை வருமாறு:- திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும்  பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திருப்பூர்  மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி பாசன அமைப்பின்கீழ் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 10.1.2012 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துளர்கள்.

No comments:

Post a Comment