இதய தெய்வம் புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான,
என் உயிரினும் மேலான
எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!
பெருமிதம் கொள்ளத் தக்க தன் வாழ்நாள்
சேவைகளாலும், தன்னிடமிருந்து இந்தச் சமூகம்
பெற்றுக் கொண்டதெல்லாம் நல்லதை மட்டுமே
என்னும் பெருமை கொண்ட வாழ்வாலும்,
உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில்
எல்லாம் நிலைத்த இடம் பிடித்து நினைவில்
இருந்து நீங்காது வாழுகின்ற காவியமாம், கழக
நிறுவனத் தலைவர் நம் இதய தெய்வம் புரட்சித்
தலைவர் எம்.ஜி.ஆரின் 95ஆவது பிறந்த நாளை
கொண்டாடுவதில் நாம் அனைவரும் அளவற்ற
மகிழ்ச்சியும், எல்லையில்லா இன்பமும்
கொள்கிறோம்.
இந்த நன்னாளில், அந்த மாசற்ற தலைவரின்
மங்காத நினைவுகளை, புரட்சித்தலைவர் மீது
அளவற்ற அன்பும், பற்றுதலும் கொண்டிருக்கும்
கழகக் கண்மணிகளாகிய உங்களோடும், தமிழக
மக்களோடும் பகிர்ந்து கொள்வதில் எல்லையில்லா
மகிழ்ச்சி அடைகிறேன்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்தை தொடவிருக்கும் நிலையிலும், அவரது நிலைத்த புகழும்,
நிகரில்லா அழகும், நீதி உரைத்த அவரது
தெளிவும், நேர்மைக்கே எந்நாளும் அஞ்சாது
வாழ்ந்திட்ட அவரது நேர்மைத் திடமும் இன்றும்
தமிழக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.
என் குடும்பம், என் மனைவி, என் துணைவி,
என் மகன்கள், என் மகள்கள், என் பேரன், என்
பேத்திகள் என்று தனக்காக மட்டுமே வாழும்
மனிதர்களை, தன்னை சுற்றியே சிந்திக்கும் சுயநலமிகளை காலம் சக்கையென துப்பிவிடுகிறது;
தூரவே வீசிவிடுகிறது. அப்படிப்பட்டவர்களின்
வாழ்க்கைப் பயணம் பதிவுகளும், சுவடுகளும்
இல்லாத பாலைவனம் ஆகிவிடுகிறது.

No comments:
Post a Comment