தமிழகத்தை தாக்கிய ?தானே? புயலின் காரணமாக
சுவர் இடிந்து விழுந்தும், மின் சாரம் தாக்கியும், புயல் மழை காரணமாகவும்
மரணமடைந்த 14 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபா உதவித்
தொகை வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
உத்தரவிட்டுள்ளார்கள். இது குறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் அறிக்கை வருமாறு :- தமிழகத்தை தாக்கிய தானே-புயலின் காரணமாக
30.12.2011 மற்றும் 31.12.2011 தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் மரம் மற்றும்
சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேரும், மின்சாரம் தாக்கியதில் ஒருவரும்,
புயல் மழை காரணமாக 8 பேரும், ஆக மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர் என்ற
செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன். ?தானே? புயலின் காரணமாக
மரணமடைந்த இந்த 14 நபர்களின் குடும்பத்தின ருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,
அனுதா பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரச் சம்பவங்களில்
உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டுலட்சம் ரூபாய்
உதவித்தொகையைஉடனடி யாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்
No comments:
Post a Comment