எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 13, 2012

பொங்கல் திருநாளுக்கு பிறந்த ஊருக்கு சிரமமின்றி சென்று திரும்ப ஜன. 12 முதல் 22 வரை 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி ஜன.14 முதல் 17 வரை சென்னை சுற்றுலா மையங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகையையட்டி பிறந்த ஊருக்கு மக்கள் சிரமமின்றி சென்றுவர
ஜனவரி 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10,090 சிறப்பு பேருந்துகளை
இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யும்
வசதியும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கேற்ப
செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
பயிர் விளையக் காரணமாய் உள்ள
பகலவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி
செலுத்தும் தமிழர் திருநாளாம் பொங்கல்
பண்டிகையினை தங்கள் சொந்த ஊர்களில்
உறவினர்களுடனும், நண்பர்களுடனும், தமிழ்
மக்கள் கொண்டாடுவது வழக்கம்.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை
தமிழக மக்கள் பொலிவுடன் கொண்டாட
தங்கள் பிறந்த ஊருக்கு எவ்வித சிரமமுமின்றி
சென்று திரும்பும் வகையில், பொங்கல் திருநாளை ஒட்டி, அரசு போக்குவரத்துக் கழகங்களின்
சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்க
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
சென்னையில் சிறப்பு ஏற்பாடு
இதன்படி, 12ஆம் தேதி அன்று 1,115 பேருந்துகளும், 13 ஆம் தேதி அன்று 1,965 பேருந்துகளும்,
14ஆம் தேதி அன்று 1,965 பேருந்துகளும் மற்றும்
15ஆம் தேதியன்று பயணிகளின் தேவைக்கேற்ப
உரிய எண்ணிக்கையிலும் பேருந்துகளை மாநில
த்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்க முதல
மைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
ஆணையிட்டுள்ளார்கள். இதில், அனைத்து
மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின்
முக்கிய பகுதிகளுக்கு சென்னை, கோயம்பேடு
புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இம்மாதம்
12ஆம் தேதி அன்று 557 பேருந்துகளும், 13ஆம்
தேதி அன்று 1,257 பேருந்துகளும் மற்றும் 14ஆம்
தேதி அன்று 1,257 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், பொங்கல் திருநாளை குடும்பத்தின
ருடன் குதூகுலமாக கொண்டாடி மீண்டும்
பணி நிமித்தமாக ஊர் திரும்பிடும் பொது மக்களின் நலன் கருதி இதே அளவிலான பேருந்துகளை 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை
இயக்கிடவும் முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில்
கொண்டு, அவர்கள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக, பொங்கல் பண்டிகையை
ஒட்டி இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கும், உடனடி இணையதள வழி பதிவு திட்டத்தின் கீழ் பயணச்சீட்டு முன்பதிவு செய்திடும் வசதியையும்
வழங்கிட முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment