எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 27, 2012

சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகளை உருவாக்க சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: புதிய திட்டத்தை துவக்க முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ஆணை

தேசிய அளவில் பதக்கம் பெறும் மாணவ,
மாணவிகளை ஊக்கப்படுத்த வழங்கப்படும்
உதவித் தொகையை அதிகரிக்க
முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மாவட்டத்துக்கு ஒரு கிராமம் தேர்ந்
தெடுக்கப்பட்டு விளையாட்டு மைதானம்
அமைக்கவும், பயிற்சி அளிக்கவும் ரூ.6
லட்சத்தை ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தர
விட்டுள்ளார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
விளையாட்டு என்பது இளைஞர்களின்
உடலையும், மனதையும் நலம் பெறச்
செய்வதோடு மட்டுமல்லாமல், நம் நாட்டின்
பெருமையை தேசிய அளவிலும், சர்வதேச
அளவிலும் இடம் பெறச் செய்வதிலும்,
மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளுக்கிடையே
நல்லெண்ணம், நட்புறவு ஆகியவற்றை
வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழக
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,
விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளித்து,
ஊக்குவித்து, வீரர்களிடையே போட்டி
மனப்பான்மையையும் வெற்றி பெறும் அμகு
முறைகளையும் வளர்த்து, விளையாட்டுத்
துறையில் தமிழகத்தின் பெருமையை உலகறியச்
செய்ய பல புதிய நடவடிக்கைகளை எடுத்து
வருகிறார்கள்.

No comments:

Post a Comment