எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 27, 2012

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும்-நேர்வழி போக்குவரத்து தடையின்றி நடக்கவும் 11 நகரங்களில் புறவழிச்சாலைகள் அமைக்க நிலங்கள் கையகப்படுத்த ரூ.153 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

தென்காசி, சங்கரன்கோவில் உட்பட
11 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க
ரூ.152 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம்
ரூபாயில் நிலங்களைக் கையகப்படுத்த
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுதொடர்பான தமிழக அரசின் செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு
மிகவும் இன்றியமையாததாகவும், நகர்ப்புறங்
களையும், கிராமப்புறங்களையும் இணைக்கும்
பாலமாகவும் சாலைக் கட்டமைப்பு விளங்குகிறது
என்று சொன்னால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சாலை
களின் உறுதித் தன்மை அதிகரித்து வரும்
வாகனங்களின் எண்ணிக்கையின் காரணமாக
விரைவிலேயே பழுதடைவதை களையும்
விதத்திலும், மேலும் நகரங்களின் போக்குவரத்
தினை சீரமைக்கும் விதத்திலும் தமிழக
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்
களின் தலைமையிலான அரசு பல்வேறு புதிய
திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நகரங்களில் ஏற்பட்டுள்ள
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும்,
நேர்வழிப் போக்குவரத்து தடையின்றி
நடைபெறும் வண்ணமும், 152 கோடியே 78
லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில், தென்காசி,
சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், முதுகுளத்தூர்,
பவானி, நாமக்கல், திருச்செங்கோடு, கடலூர்,
ஆற்காடு, திருப்பத்தூர்,திருவண்ணாமலைஆகிய
நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும்
பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்த
தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment