சென்னை, ஜன. 25
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மழைக் காலத்தில் கடலில்
வீணாக கலக்கும் உபரி நீரைத் தேக்கி மாநகர மக்களின் குடிநீர்த் தேவைக்கு
பயன்படுத்தும் வகையில் கும்மிடிப்பூண்டி வட்டம் கண்ணன்கோட்டை-தேர்வை
கண்டிகை ஆகிய இரண்டு ஏரிகளை இணைத்து ரூபாய் 330 கோடியில்
நீர்த்தேக்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்
குறிப்பு வருமாறு:
சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளி
ல் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள்
தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து
வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு
குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்திட முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், மழைக்காலத்தில் கிடைக்கும் உபரி
நீர் மற்றும் கிருஷ்ணா குடிநீர்த் திட்டத்தின்
மூலம் கிடைக்கும் அதிகப்படியான நீரை
தேக்கி வைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைக
ளை எடுக்கவும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment