எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, January 1, 2012

ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம் என்ற உறுதியுடன் பொற்காலத் தமிழகத்தை புதிதாய் மீண்டும் படைப்போம்! முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா புத்தாண்டு வாழ்த்து

தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும், நலனும் பெற வேண்டும் என்றும் ஒன்று பட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! எந்த நிலையிலும் எந்த வகையிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தரமாட்டோம் என்ற உறுதி கொண்ட உள்ளத்துடன் பொற்காலத் தமிழகத்தை புதிதாய் மீண்டும் படைப்போம் என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். � எந்த நிலையிலும், எந்த வகையிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வருமாறு:-புதுப்பொலிவுடன் புத்தாண்டு புலர்கின்ற இந்த இனிய நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்ற உன்னத, உயரிய லட்சியத்தை அடைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உங்கள் சகோதரியின் தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வரும் வேளை இது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றிட, தமிழகத்தில் புதிய சாதனைப் பூக்கள் பூத்துக் குலுங்கி எங்கும் மணம் பரப்பிட உளப்பூர்வமாக உழைக்கின்ற தருணம் இது! சீர்மிகு திட்டங்கள் ஏற்றம் பெறவும், ஏழ்மை நிலை அகன்றிடவும், தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவரும் பெற்றிட வேண்டும் என்பதே இந்த இனிய புத்தாண்டில் எனது பேரவா.ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! எந்த நிலையிலும், எந்த வகையிலும, தமிழ் நாட்டின் உரிமைகளை ஒரு போதும் விட்டுத்தர மாட்டோம்! உறுதி கொண்ட உள்ளத்துடன் பொற்காலத் தமிழகத்தை புதிதாய் மீண்டும் படைப்போம்! இந்த இனிய புத்தாண்டில் எனது அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது புத்தாண்டு நல்வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment