எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, January 5, 2012

தற்போது நிலவி வரும் விலைவாசி சூழலை கருத்தில் கொண்டு திருக்கோயில் பாதுகாப்புப் படையிலுள்ள முன்னாள் ராμவத்தினருக்கு வழங்கும் தொகுப்பூதியம் ரூ.1500லிருந்து 5 ஆயிரமாக அதிகரிப்பு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு


தற்போது நிலவி வரும் விலைவாசி சூழலைக் கருத்தில் கொண்டு திருக்கோயில் பாதுகாப்புப் படையிலுள்ள முன்னாள் ராμவத்தினரின் தொகுப்பூதியத்தை ரூ.1500லிருந்து ரூ.5ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தர இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- தமிழகத் திருக்கோயில்கள் பண்பாட்டுத் தொன்மை, கலை வளம், வரலாறு, வழிபாட்டு மரபு ஆகியவற்றை உலகெங்கும் பறை சாற்றும் கலைக் களஞ்சியங்களாகும். திருக்கோயில்கள், மக்களின் வழிபாட்டு மையங்களாக விளங்குவதோடு மட்டுமின்றி தமிழர்களின் கலை, பண்பாட்டு வளர்ச்சியின் சின்னங்களாகவும், இந்து சமய மரபுமாட்சியை வெளிக் கொணரும் காலச்சுவடுகளாகவும் விளங்குகின்றன. இத்திருக்கோயில்கள் ஆன்மீகசிந்தனைகளையும், அற உணர்வுகளையும் சமுதாயத்திற்கு வழங்குவதுடன் ஒழுக்க நெறியையும் கற்றுத் தருகின்றன. திருக்கோயில்களில் வழிபாடுகள் நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளைஏற்படுத்தித் தருதல், திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களைப் பாதுகாத்துப் பராமரித்தல் ஆகிய பணிகளை நிறைவேற்றத் தேவையான வீரர்களைக் கொண்ட ?திருக்கோயில் பாதுகாப்பு படை? என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். இப்பாதுகாப்புபடையில்பணியாற்றும்முன்னாள் ராμவத்தினருக்கு 2001-ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதியமாக 1,500ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. திருக்கோயில் பாதுகாப்பு படையில் உள்ள முன்னாள் ராμவத்தினர் ஆற்றும் பணிகளின் தன்மை மற்றும் தற்போது நிலவி வரும் விலைவாசி சூழலை கருத்தில் கொண்டு, அவர் களுக்கு வழங்கப்பட்டு வரும்தொகுப்பூதியத்தினை 1,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். திருக்கோயில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் முன்னாள் ராμவத்தினர் இதன் மூலம் மிகுந்த பயன் அடைவார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment