எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, January 9, 2012

முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழகத்தின் வளத்துக்கு வித்திட்ட பென்னி குவிக்குக்கு லோயர் கேம்ப்பில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு அவரது பேரன் அழைக்கப்படுவார் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழகத்தின் வளத்துக்கு வித்திட்ட
பென்னிகுவிக்குக்கு 1 கோடி ரூபாய் செலவில் லோயர் கேம்ப்பில் திருவுருவச் சிலையுடன்கூடிய மணி மண்டபம் கட்டப்படும் என்றும், திறப்பு விழாவுக்கு அவரது பேரன் அழைக்கப்படுவார் என்றும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை
வருமாறு:-தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைகளை
பூர்த்தி செய்வதில்தென்தமிழக மாவட்டங்களான
தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்,
திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களும் முக்கிய
பங்கு வகிக்கின்றன. மேற்கு தொடர்ச்சி
மலையில் பெய்யும் மழைநீர், முல்லை ஆறு
மற்றும் பெரியாறு என்ற ஆறுகளாக கேரள
மாநிலத்தில் ஓடி வீணாக கடலில் கலப்பதை
தவிர்க்க உருவாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு
அணை மூலம் இந்த மாவட்டங்களுக்கு
பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கப்
பெறுகிறது. மேலும், இம்மாவட்டங்களின்
குடிநீர் தேவையும் இந்தஅணைமூலம்பெருமளவு
நிறைவு செய்யப்படுகிறது. இந்த முல்லைப்
பெரியாறு அணையை உருவாக்கியவர் கர்னல்
பென்னிகுவிக் என்ற ஆங்கிலேய பொறியாளர்
ஆவார். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்
ராμவ பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர்.
நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில்,
பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன்,
சென்னைமாகாணத்தில்,வைகைவடிநிலப்பரப்பில்
பல முறை மழை பொய்த்து மிகுந்தஉணவுபஞ்சம்
ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான
மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட
பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார்.
இதன்தொடர்ச்சியாக, கர்னல் பென்னிகுவிக்,
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர்
பெரியாறு என்ற ஆறாக மேற்குப் புறமாக ஓடி
அரபிக் கடலில் வீணாகச் சென்று கலப்பதைப்
பார்த்து இதனை கிழக்குப் புறமாக திருப்பி
விடுவதன் மூலம் வைகை நதி நீரை மட்டுமே
நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் வறண்டநிலங்கள்
விளை நிலங்களாக மாறும் எனக் கருதி,
பெரியாற்றின் குறுக்கே அணை ஒன்றினை
கட்ட திட்டமிட்டார்.
இதன் அடிப்படையில் பெரியாறு தேக்கடி
நீர்தேக்கம் உருவாக்கப்பட்டு, அவை கிழக்கு
முகமாக திருப்பி விடப்பட்டு, அங்கிருந்து ஒரு
குகைப் பாதைவழியாகவைகைஆற்றிற்குத்திருப்பி
விடப்படுகிறது. இதற்காக திட்டம் ஒன்றினை
தயாரித்து ஆங்கில அரசின் பார்வைக்குஅனுப்பி
அனுமதியும் பெற்றார். அப்போதைய சென்னை
மாகாண அரசின் கவர்னர் லார்டு கன்னிமாரா
முன்னிலையில்அணைகட்டுவதற்கானபணிகள்
தொடங்கப்பட்டன. ஆங்கிலேயப் பொறியாளர்
கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ்
பொறியாளர்கள் இந்த அணை கட்டுமானப்
பணியினைமேற்கொண்டனர். காடு,விஷப்பூச்சிகள்,
காட்டு யானைகள்,வனவிலங்குகள், கடும் மழை,
திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளம்
போன்றவைகளையும் பொருட்படுத்தாமல்,
மூன்றுஆண்டுகளில்அணைபாதி கட்டப்பட்டுக்
கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த
மழையினால் உருவான வெள்ளத்தினால்,
கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, இந்தத் திட்டத்தினை
தொடர்வதற்கு ஆங்கிலேய அரசின் நிதி
ஒதுக்கீடு குறிப்பிட்ட காலக்கட்டங்களில்
கிடைக்காததால் பென்னிகுவிக் இங்கிலாந்து
சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று,
அதன்மூலம்கிடைத்தபணத்தை கொண்டுவந்து,
முல்லைப் பெரியாறு அணையை 1895-ஆம்
ஆண்டில் கட்டி முடித்தார். இந்த அணை
அக்டோபர் 1895ஆம் ஆண்டு அப்போதைய
சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக்
தென் தமிழகத்தின் வளத்திற்காக முல்லைப்
பெரியாறு அணையை பல்வேறு இடர்பாடு
களுக்கிடையே உரிய காலத்தில் முடிப்பதற்காக
தனது சொந்த நிதியினையும் செலவு செய்த
பென்னிகுவிக் நினைவை நன்றியுடன் போற்றும்
வகையில்அன்னாருக்கு லோயர் கேம்ப்பில்உள்ள
தமிழ்நாடு மின்சார வாரிய வளாகப் பகுதியில்
சுமார் 2500 சதுரஅடிபரப்பில், ஒரு கோடி ரூபாய்
செலவில், அவரது திருஉருவ சிலையுடன் கூடிய
ஒரு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை
பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மணிமண்டபம்கட்டி முடிக்கப்பட்டபின்,
அதன்திறப்பு விழாவிற்குபென்னிகுவிக்கின்பேரன்
அழைக்கப்படுவார். முல்லைப் பெரியாறுஅணை
மூலம் தென் தமிழகத்தின் வளத்திற்கு வித்திட்ட
பெருமகனின்சேவையைநன்றியுடன்நினைவுகூரும்
வகையில் இந்த மணிமண்டபம் அமையும்.
இவ்வாறுமுதலமைச்சர்புரட்சித்தலைவிஅம்மா
அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment