எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, January 17, 2012

நகர்ப்புறப் பகுதிகளில் அடிப்படை வசதி - பேருந்து நிலையம் - பூங்காக்கள் ரூ.6,654 கோடியில் அமைக்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு மாநகராட்சி - நகராட்சி - பேரூராட்சியில் முதல் கட்டமாக பணிகளை மேற்கொள்ள ரூ.757 கோடி ஒதுக்கீடு

நகர்ப்புற பகுதிகள் அடிப்படை வசதிகள்,
பேருந்து நிலையங்கள், பூங்காக்களை
ரூ.6,654.03 கோடியில் அமைக்க
உத்தரவிட்டுள்ள முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள், முதல்
கட்டமாக ரூ.757 கோடியே 28 லட்சத்தை
அதற்காக ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு வருமாறு
வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கட்தொகை
மற்றும் தொடர்புடைய வணிக நடவடிக்கை
களுக்கு ஏற்ப நகரக் கட்டமைப்புகளை
அதிகப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும்,
தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் தலைமையிலான அரசு
முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
வளர்ந்துவரும் நகரங்கள்
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை
கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 48.45
விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து
வருகின்றனர். இது வரும் 20 ஆண்டுகளில்
அதாவது 2030-ம் ஆண்டில் 67 விழுக்காடாக
உயர வாய்ப்பு உள்ளது. மக்கள்
வேலைவாய்ப்புக்காக அருகிலுள்ள
நகரங்களுக்கு அதிக அளவு இடம்
பெயர்வதாலும், நகரங்கள் அதிவேக
வளர்ச்சியடைந்து வருவதாலும், மக்களுக்கு
தேவையான அடிப்படை வசதிகளை செய்து
கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் தலைமையிலான அரசு
"ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்"
என்ற ஒரு திட்டத்தினை துவக்க முடிவு
செய்துள்ளது.

No comments:

Post a Comment