எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, January 30, 2012

தமிழக மக்கள் உள்ளங்களில் வாழுகின்ற மாபெரும் தலைவர்களான பேரறிஞர் அண்ணா-பாரத ரத்னா எம்.ஜி.ஆர். நினைவிடங்களை புதுப்பொலிவுடன் புனரமைத்து எழிலூட்ட ரூ.9 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

சென்னை, ஜன. 30
தமிழக மக்கள் உள்ளங்களில் வாழுகின்ற மாபெரும் தலைவர்களான
பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவிடங்களை
புதுப்பொலிவுடன் புனரமைத்து எழிலூட்ட 8 கோடியே 90 லட்சம் ரூபாயை
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒதுக்கீடு செய்து
உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில்
எல்லாம்" என்றார் மகாகவி பாரதியார். அதுபோல்
தமிழக மக்கள் உள்ளங்களில் இன்றளவும்
வாழுகின்ற மாபெரும் தலைவர்கள் பேரறிஞர்
அண்ணா அவர்களும், பாரத ரத்னா எம்.ஜி.ஆர்
அவர்களும்ஆவர். பேரறிஞர்அண்ணாஅவர்கள்
தனது இதயக்கனி என்று சொன்னது முன்னாள்
முதல்வர்பாரதரத்னாஎம்.ஜி.ஆர்அவர்களைத்தான்.
எனவே,இவ்விரண்டுதலைவர்களின்நினைவிடங்
களும் அருகருகே அமைந்திருப்பது இயற்கையே
யாகும்.

பணி சிறக்க தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.2 கோடியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு புதிய மடிக்கணினி அல்லது கணினி பிரிண்டர்- அகண்ட அலைவரிசை இணைய தள இணைப்பு வசதி வாங்கிக்கொள்ளலாம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அனுமதி.

சென்னை, ஜன. 30
கணினி புரட்சி மூலம் பல தகவல்களை இருந்த இடத்திலிருந்தே தெரிந்து
கொண்டு பணி சிறக்க சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு
நிதியான ரூ.2 கோடியிலிருந்து ஒரு புதிய மடிக்கணினி அல்லது கணினி
பிரிண்டர் மற்றும் அகண்ட அலைவரிசை இணையதள இணைப்பு வசதி
ஆகியவற்றை ஒரு முறை மட்டும் வாங்கிக் கொள்வதற்கு முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு
வருமாறு:
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற
உறுப்பினர்கள் மூலமேமக்களாட்சிநடைபெறுகிறது.
தற்பொழுது ஏற்பட்டுள்ள கணினி புரட்சியின்
மூலம் பல தகவல்களை இருந்த இடத்திலிருந்து
கணினியின் மூலம் தெரிந்துக் கொண்டு,
அவர்களின் பணி சிறக்க அவர்களுக்கு கணினி
வழங்க வேண்டியது அவசியமானதாகும்.
எனவே தமிழக முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் 11.08.2011 அன்று 2011-
12ஆம் ஆண்டைய திருத்திய வரவு, செலவு
திட்டத்திற்கான பொது விவாதத்தின்போது சட்ட
மன்றஉறுப்பினர்கள்,சட்டமன்றஉறுப்பினர்தொகுதி
மேம்பாட்டுத்திட்டநிதியிலிருந்துஒருமடிக்கணினி
வாங்கிக்கொள்ளலாம் என அறிவித்தார்கள்.மேலும்
நடப்பாண்டில் சட்டமன்ற உறுப்பினர்களின்
தொகுதி மேம்பாட்டு நிதி 1 கோடியே 75
லட்சம் ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக
உயர்த்தி வழங்கவும் அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, ஒவ்வொரு
சட்டமன்ற உறுப்பினரும், 2011-12 ஆம் ஆண்டு
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்
திட்ட நிதியான 2 கோடியில் வரையறுக்கப்படாத
நிதியான 87 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்துதங்களின்
தேவைக்கேற்ப தலா ஒரு புதிய மடிக்கணினி
அல்லது கணினி பிரிண்டர்
மற்றும் அகண்ட அலைவரிசை
இணையதள இணைப்பு வசதி ஆகியவற்றை ஒருமுறை மட்டும்
வாங்கிக் கொள்வதற்கு தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒப்புதல்
அளித்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

65வது நினைவு நாளையட்டி அண்ணல் காந்தி திருவுருவச் சிலைக்கு ஆளுநர் - முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மாலை அணிவித்து மரியாதை.

சென்னை, ஜன. 30
தேசப் பிதா மகாத்மா
காந்தியின் 65வது நினைவு
தினமான இன்று தமிழக
அரசின் சார்பில் அவரது
திருவுருவச் சிலைக்கு
தமிழக ஆளுநர் டாக்டர்
ரோசையாவும், தமிழக
முதலமைச்சர் புரட்சித்
தலைவிஅம்மாஅவர்களும்
மலர் மாலை அணிவித்து
மரியாதை செலுத்து
கிறார்கள்.
கொடியவன் கோட்சே
வால் அண்ணல் காந்திய
டிகள் சுட்டுக் கொல்லப்
பட்டு 64 ஆண்டுகள்
உருண்டோடி விட்டன.
இன்று அண்ணல்
காந்தியின் 65வது நினைவு
தினமாகும். அதை
யட்டி அவரது நினை
விடத்திலும், நாடெங்
கிலுமுள்ள காந்தி மண்ட
பங்கள், திருவுருவச் சிலை
களுக்கும் அரசியல் தலை
வர்களும், நாட்டு மக்களும்
மரியாதை செலுத்து
கிறார்கள்.
சென்னையில் கிண்டி
யிலுள்ள காந்தி மண்டபம்
உட்பட பல்வேறு இடங்
களில்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் காமரா
ஜர் சாலையிலுள்ள
மகாத்மா காந்தியடிகள்
திருவுருவச் சிலைக்கு
தமிழக அரசின் சார்பில்
மாலை அணிவித்து மரி
யாதை செலுத்தப்பட
உள்ளது.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது ஆளுநர் உரை நிகழ்த்துகிறார்.

சென்னை, ஜன. 30
தமிழக சட்டப்பேரவை
இன்று கூடுகிறது. ஆளுநர்
ரோசையா பேரவையில்
உரையாற்றுகிறார்.
முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள்
பொறுப்பேற்ற பின் கடந்த
ஜூன் மாதம் சட்டப்
பேரவைக் கூட்டம் நடை
பெற்றது. இதனைத்
தொடர்ந்து பட்ஜெட்
கூட்டத் தொடர் கடந்த
ஆகஸ்ட் மாதம் தொடங்கி
செப்டம்பரில் நிறைவுற்றது.
முல்லைப் பெரியாறு
அணைவிவகாரம் தொடர்
பான சட்டசபையின்
சிறப்புக் கூட்டம் கடந்த
டிசம்பர் 15ம் தேதி நடை
பெற்றது.

Friday, January 27, 2012

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 21/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதா அவர்களின்
முக்கிய அறிவிப்பு
1. திரு. தோட்டக்கலை V.கிருஷ்ணமூர்த்தி,
2. திருமதி சந்தானலட்சுமி சுந்தரவதனம்,
3. திரு. சுந்தரவதனம்,
4. திருமதி வைஜெயந்தி மாலா
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை
உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி
வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன்
எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது
எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 20/2012


அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம்
கழக மருத்துவ அணி துணைச் செயலாளர்
பொறுப்பில் இருக்கும் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,
எம்.எல்.ஏ., அவர்களும்,
புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில் இருக்கும் திரு. வி.சி.ராமையா
அவர்களும்,
இன்று முதல் அவரவர் வகித்து வரும்
பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்
படுகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில்,
டாக்டர் சி. விஜயபாஸ்கர்,அவர்கள்
(விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு
ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 19/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
திருச்சி புறநகர் மாவட்டம்
திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில் இருக்கும்
திரு. ரி.ரி. பாலசுப்பிரமணியன் அவர்கள்
இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்படுகிறார்.
திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில்,
திரு.N.R.சிவபதி, அவர்கள்
(முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு
ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 18/2012

அனைத்திந்தியஅண்ணாதிராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
கோவை புறநகர் மாவட்டம்
கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில் இருக்கும்
திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள்
இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்படுகிறார்.
கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில்,
திரு.செ. தாமோதரன் அவர்கள்
(பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
வேளாண்மைத்துறை அமைச்சர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு
ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 17/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச்
செயலாளர் பொறுப்பில் இருக்கும்
திரு. தூசி கே.மோகன் அவர்கள்
இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்படுகிறார். இவர் ஏற்கெனவே
வகித்து வரும் வெம்பாக்கம் ஒன்றியக் கழகச்
செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து
செயலாற்றுவார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச்
செயலாளர் பொறுப்பில்,
திரு.முக்கூர் என்.சுப்பிரமணியன், ஙி.கி.,அவர்கள்
(செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு
ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 16/2012

அனைத்திந்தியஅண்ணாதிராவிட முன்னேற்றக் கழகப்
பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
மகாராஷ்டிர மாநிலம்
மும்பை மாநகராட்சித் தேர்தல் - கழக வேட்பாளர்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு எடுத்த
முடிவின்படி, 16.2.2012 அன்று நடைபெற உள்ள மகாராஷ்டிர மாநிலம், மும்பை மாநகராட்சித்
தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ
வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காம் வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு
நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1. சாகுநகர் 180ஆவது வார்டு - திரு. ஷி.கி.நிக்கம் அவர்கள்
2. மலாட் மேற்கு 31வது வார்டு - திரு. ராஜா பழனிசாமி நாயனார் அவர்கள்

63வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ரோசையா கழக அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகள், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி என களைகட்டியது.

இந்திய திருநாட்டின் 63வது குடியரசு தின
விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னையில் முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் முன்னிலையில் ஆளுநர் கே. ரோசையா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
63வது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் மெரீனா
கடற்கரை காந்தி சிலை அருகே நடை பெற்றது.
தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில்
நடைபெற்ற வண்ணமிகு விழாவில் கலந்துகொள்வதற்காக
போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்பட்ட
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை,
சென்னை காவல்துறை போக்குவரத்து காவலர்கள்
இருசக்கர வாகன அணிவகுப்பு மரியாதையுடன்
அழைத்து வந்தனர். காமராஜர் சாலையின் இருமருங்கிலும்
திரண்டிருந்த மக்களின் வரவேற்பை முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை
தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி வரவேற்று
விழா மேடைக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் விழா மேடைக்கு வந்த ஆளுநர் ரோசையாவை,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
வரவேற்று, முப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறை
உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் முன்னிலையில், ஆளுநர் ரோசையா
தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு
மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகளை உருவாக்க சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: புதிய திட்டத்தை துவக்க முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ஆணை

தேசிய அளவில் பதக்கம் பெறும் மாணவ,
மாணவிகளை ஊக்கப்படுத்த வழங்கப்படும்
உதவித் தொகையை அதிகரிக்க
முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மாவட்டத்துக்கு ஒரு கிராமம் தேர்ந்
தெடுக்கப்பட்டு விளையாட்டு மைதானம்
அமைக்கவும், பயிற்சி அளிக்கவும் ரூ.6
லட்சத்தை ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தர
விட்டுள்ளார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
விளையாட்டு என்பது இளைஞர்களின்
உடலையும், மனதையும் நலம் பெறச்
செய்வதோடு மட்டுமல்லாமல், நம் நாட்டின்
பெருமையை தேசிய அளவிலும், சர்வதேச
அளவிலும் இடம் பெறச் செய்வதிலும்,
மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளுக்கிடையே
நல்லெண்ணம், நட்புறவு ஆகியவற்றை
வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழக
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,
விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளித்து,
ஊக்குவித்து, வீரர்களிடையே போட்டி
மனப்பான்மையையும் வெற்றி பெறும் அμகு
முறைகளையும் வளர்த்து, விளையாட்டுத்
துறையில் தமிழகத்தின் பெருமையை உலகறியச்
செய்ய பல புதிய நடவடிக்கைகளை எடுத்து
வருகிறார்கள்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும்-நேர்வழி போக்குவரத்து தடையின்றி நடக்கவும் 11 நகரங்களில் புறவழிச்சாலைகள் அமைக்க நிலங்கள் கையகப்படுத்த ரூ.153 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

தென்காசி, சங்கரன்கோவில் உட்பட
11 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க
ரூ.152 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம்
ரூபாயில் நிலங்களைக் கையகப்படுத்த
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுதொடர்பான தமிழக அரசின் செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு
மிகவும் இன்றியமையாததாகவும், நகர்ப்புறங்
களையும், கிராமப்புறங்களையும் இணைக்கும்
பாலமாகவும் சாலைக் கட்டமைப்பு விளங்குகிறது
என்று சொன்னால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சாலை
களின் உறுதித் தன்மை அதிகரித்து வரும்
வாகனங்களின் எண்ணிக்கையின் காரணமாக
விரைவிலேயே பழுதடைவதை களையும்
விதத்திலும், மேலும் நகரங்களின் போக்குவரத்
தினை சீரமைக்கும் விதத்திலும் தமிழக
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்
களின் தலைமையிலான அரசு பல்வேறு புதிய
திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நகரங்களில் ஏற்பட்டுள்ள
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும்,
நேர்வழிப் போக்குவரத்து தடையின்றி
நடைபெறும் வண்ணமும், 152 கோடியே 78
லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில், தென்காசி,
சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், முதுகுளத்தூர்,
பவானி, நாமக்கல், திருச்செங்கோடு, கடலூர்,
ஆற்காடு, திருப்பத்தூர்,திருவண்ணாமலைஆகிய
நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும்
பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்த
தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

Wednesday, January 25, 2012

கடலில் வீணாகக் கலக்கும் உபரி நீரை மாநகர மக்களின் குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்த கும்மிடிப்பூண்டி வட்டம் கண்ணன்கோட்டை-தேர்வை கண்டிகை ஏரிகளை இணைத்து ரூ.330 கோடியில் புதிய நீர்த்தேக்கம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு



சென்னை, ஜன. 25
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மழைக் காலத்தில் கடலில்
வீணாக கலக்கும் உபரி நீரைத் தேக்கி மாநகர மக்களின் குடிநீர்த் தேவைக்கு
பயன்படுத்தும் வகையில் கும்மிடிப்பூண்டி வட்டம் கண்ணன்கோட்டை-தேர்வை
கண்டிகை ஆகிய இரண்டு ஏரிகளை இணைத்து ரூபாய் 330 கோடியில்
நீர்த்தேக்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்
குறிப்பு வருமாறு:
சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளி
ல் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள்
தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து
வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு
குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்திட முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், மழைக்காலத்தில் கிடைக்கும் உபரி
நீர் மற்றும் கிருஷ்ணா குடிநீர்த் திட்டத்தின்
மூலம் கிடைக்கும் அதிகப்படியான நீரை
தேக்கி வைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைக
ளை எடுக்கவும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளா
ர்கள்.

ஓய்வூதியம் பெறும் கட்டுமானத் தொழிலாளியின் மறைவிற்குப் பிறகு மனைவி அல்லது கணவருக்கு மாத ஓய்வூதியம் 400 ரூபாய் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

சென்னை, ஜன. 25
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள் நல
வாரியத்தில் பதிவு பெற்று, ஓய்வூதியம் பெறும்
கட்டுமானத் தொழிலாளி இறந்துவிட்டால்,
கணவருக்கோ, அல்லது மனைவிக்கோ குடும்ப
ஓய்வூதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 400
வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்
குறிப்பு வருமாறு:
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்
வளர்ச்சிக் காரணமாக, அமைப்பு சார்ந்த
மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின்
எண்ணிக்கை பெருகி வருகின்றது. இவர்களின்
நலனைப் பேம் வகையில் 1982ஆம் ஆண்டில் தமிழக அரசால் தமிழ்நாடு உடலுழைப்பு
தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலை-
மைகள் முறைப்படுத்துதல்) சட்டம் இயற்றப்பட்-
டது. இச்சட்டத்தின் பிரிவு 6&ன்படி தமிழ்-
நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்
தோற்றுவிக்கப்பட்டது. தொழி-லாளர்கள் நலனில்
குறிப்பாக அமைப்பு சாரா தொழிலா-ளர்கள் பணிகள்
மற்றும் வாழ்க்கைத் தரம் மேன்மை அடைவதி
ல் பெரிதும் அக்-கறைக் கொண்டுள்ள முதல
மைச்சர் புரட்சித்-தலைவி அம்மா அவர்கள்
தனது முந்தைய ஆட்சிக் காலத்-தில் அதாவது
1994ஆம் ஆண்-டில், தமிழ்நாடு உடலுழைப்பு
தொழிலாளர் (கட்டு-மானத் தொழிலாளர்கள்)
நலத் திட்டத்-தினை ஏற்படுத்தினார்கள்.

சென்னை மாநகராட்சியில் பணியிலிருக்கும்போது உயிரிழந்த 76 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை: முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா நேரில் வழங்கினார்

சென்னை, ஜன. 25
சென்னை மாநகராட்சியில் பணியிலிருக்கும்
போது உயிரிழந்த 76 பணியாளர்களின்
வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில்
பணிநியமன ஆணைகளை முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 24.1.2012 அன்று
தலைமைச் செயலகத்தில் வழங்கினார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்தி குறிப்பு
வருமாறு:
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் 24.1.2012 அன்று தலைமைச்
செயலகத்தில், சென்னை மாநகராட்சியில்
பணியிலிருக்கும்போது உயிரிழந்த 76
பணியாளர்களின் வாரிசுதரர்களுக்கு கருணை
அடிப்படையில் பணிநியமன ஆணைகளை
வழங்கி வாழ்த்தினார்கள்.

பாபநாசம்-பட்டுக்கோட்டை-அவிநாசி-பல்லடம்-பாப்பிரெட்டிப்பட்டியில் 8 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை முதல்வர் புரட்சித்தலைவி அம்மா திறந்துவைத்தார்.

சென்னை, ஜன. 25
பாபநாசம், பட்டுக்கோட்டை, அவிநாசி, பல்லடம்,
பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய5 இடங்களில் 8 கோடி
ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய
அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமைச்
செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து
வைத்தார்கள்.
இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு
வருமாறு:
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் 24.1.2012 அன்று தலைமைச்
செயலகத்தில், ஒப்படைக்கப்பட்ட வருவாய்
மூலம் 7 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து ஊராட்சி
ஒன்றிய அலுவலகக் கட்டடங்களைக் காணொலி
காட்சி மூலம் திறந்து
வைத்தார்கள்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி
ஒன்றிய அலுவலக கட்டடங்கள் பயன்படுத்த
முடியாத அளவிற்கு மிகவும் பழுதடைந்து
உள்ளதையடுத்து, ஒப்படைக்கப்பட்ட வருவாய்
மூலம் ஐந்து ஊராட்சி ஒன்றிய
அலுவலகங்களுக்குக் கட்டடங்கள் கட்ட
தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப் பட்டு,
அதன் பணிகள் தற்போது முடிவடைந் துள்ளன.

Monday, January 23, 2012

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 'ஸ்மார்ட் கார்டு' மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுவது மூன்று கட்டமாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 4385 கிராமங்களில் ஜூன் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

சென்னை, ஜன. 22
தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உத்தரவுப்படி,
தமிழக அரசால் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும்
ஓய்வூதியம் "பயோ மெட்ரிக் ஸ்மார்ட் கார்டு" மூலம் தமிழகத்திலுள்ள
அனைத்து கிராமங்களிலும் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக
வழங்கும் திட்டம் மூன்று கட்டமாக விரிவுப்படுத்தப்படும் என தமிழக அரசு
அறிவித்துள்ளது இது தொடர்பாக தமிழக அரசு
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு
சமூகத்தில் மிகவும் நலிந்த பிரிவைச் சேர்ந்த
முதியோர், மாற்றுத் திறனுடையோர்,
விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட
பெண்கள் ஆகியோரின் நலனுக்காக, தமிழக
அரசால் பல்வேறு சமூக பாதுகாப்புத்
திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு
வருகிறது. தமிழக முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் பதவியேற்றவுடன்
பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ்
வழங்கப்படும் ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து
1,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டார்கள். இந்த
ஓள்வூதியம் உரியவர்களுக்கு உரிய நேரத்தில்,
முழுதொகையும் சென்றடைவதில் உள்ளநிர்வாக
சிக்கல்களை அறிந்த தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சமூகப்
பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும்
மாதாந்திர ஓய்வூதியத்தை வங்கிகள் மூலமாக
பயோமெட்ரிக் ஸ்மார்ட் அட்டையினை பயன்
படுத்தி வழங்கும் ஒரு முன்னோடி திட்டத்தினை
செயல்படுத்த உத்தரவிட்டார்கள்.
இம்முன்னோடித் திட்டத்தின்படி சமூகப்
பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாதாந்திர
ஓய்வூதியம் பெறும் ஒவ்வொரு பயனாளிகளின்
பெயரிலும் வங்கிக் கணக்கு தொடங்கப்படும்.
பயனாளிகளின் அங்க அடையாளங்களை
அடிப்படையாகக் கொண்ட அட்டையை பயன்படுத்தி வங்கி சேவையாளர்
கள் மூலமாக பயனாளிகளின் கிராமத்திற்கு
நேரில் சென்றே பயனாளிகளுக்கு மாதாந்திர
ஓய்வூதியம் வழங்கப்படும்.

Sunday, January 22, 2012

அரசு ஊழியர்-தொழிற்சாலை பணியாளர்களின் வசதிக்காக ஜனவரி 22, 29, பிப்ரவரி 5, 12 ஆகிய தேதிகளில் குடும்ப அட்டைகளை புதுப்பிக்க ஞாயிற்றுக்கிழமைகளில் நியாய விலைக் கடைகள் திறப்பு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அரசு நடவடிக்கை.

அரசுப் பணியாளர்கள், தொழிற்சாலைகளில்
பணிபுரிவோர் வசதிக்காக, ஜனவரி 22, 29
மற்றும் பிப்ரவரி 5, 12 ஆகிய ஞாயிற்றுக்
கிழமைகளில் நியாய விலைக்கடைகள்
திறந்திருக்கும் என்றும், அப்போது குடும்ப
அட்டைகளைப் புதுப்பித்துக்கொள்ளலாம்
என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு வருமாறு
2012ஆம் ஆண்டில் குடும்ப அட்டைகளை
புதுப்பிக்கும் பணி சனவரி மற்றும் பிப்ரவரி
2012 மாதங்களில் நடைபெற்று வருகிறது. அரசு
பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளில்
பணிபுரியும் பணியாளர்கள் தங்களது பணியின்
காரணமாக நியாய விலை கடைகளுக்கு
சென்று தங்களது குடும்ப அட்டைகளை பணி
நாட்களில் புதுப்பிக்க இயலவில்லை என்றும்,
எனவே தங்களுடைய குடும்ப அட்டைகளை
புதுப்பிப்பதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில்
நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்து
புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு
கோரியுள்ளனர். எனவே, அரசு பணியாளர்கள்
மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும்
பணியாளர்களுக்கு அவர்களுடைய குடும்ப
அட்டைகளை புதுப்பிப்பதற்கு ஏதுவாக,
22.1.2012, 29.1.2012, 5.2.2012 மற்றும் 12.2.2012 ஆகிய
ஞாயிற்றுக்கிழமைகளில், நியாயவிலைக்
கடைகளை திறந்துவைத்து குடும்ப அட்டைகளை
புதுப்பித்தல் மற்றும் பொருள்கள் வழங்கும்
பணியினை மேற்கொள்ள அனுமதித்தும்
அதற்கு பதிலாக 23.1.2012, 30.1.2012, 6.2.2012 மற்றும்
13.2.2012 ஆகிய தேதிகளை நியாயவிலைக் கடை
பணியாளர்களுக்கு விடுமுறை தினங்களாக
அறிவித்தும் ஆணையிட்டுள்ளது.

சமூக நலத்துறை-தொழில் வணிகத் துறை அலுவலகங்களுக்கு புதிய தளவாடங்கள் வாங்க ரூ.2.46 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

சேப்பாக்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் சேதமடைந்த சமூக நலத்துறை
இயக்குநரகம் மற்றும் தொழில் வணிகத் துறை அலுவலகங்களுக்கு தேவையான
புதிய தளவாடங்களை வாங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
ரூ. 2.46 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். தீயில் எரிந்துபோனது போன்ற கட்டடத்தை
மீண்டும் கட்ட இயலுமா என்பதை அறிய குழு ஒன்றையும் நியமித்துள்ளார்கள்.
இதுதொடர்பாக தமிழக அரசின் செய்திக்
குறிப்பு வருமாறு:
சமூகநலத்துறை இயக்குனரகம், மற்றும் தொழில்
வணிகத்துறை இயக்குனரகம் ஆகிய அரசு
அலுவலகங்கள் இயங்கி வந்த சேப்பாக்கம்
எழிலகம் வளாகத்தில் உள்ள தொன்மை வாய்ந்த
கட்டடத்தில் அரசு விடுமுறை தினமான
15.01.2012 அன்று நள்ளிரவு 12.30 மணியளவில்
தீ விபத்து ஏற்பட்டது. அதில் சமூக நலத்துறை
இயக்குனரகம் மற்றும் தொழில் வணிகத்துறை
இயக்குனரகம் ஆகிய அலுவலகங்கள் பெரிதும்
பாதிப்புக்கு உள்ளாகின. இவற்றிலிருந்த பல
ஆவணங்கள், கோப்புகள், கணினிகள், மேஜை,
நாற்காலி போன்றஅனைத்துதளவாடச் சாமான்
களும் தீக்கிரையாகி உள்ளன. சமூகநலத்துறைக்கு
இதன் மூலம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய்
அளவிற்கும் மற்றும் தொழில் வணிகத்துறை
அலுவலகத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய்
அளவிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்
பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கக் கோரும் வழக்கு 4ந் தேதி உத்தரவு பிறப்பிக்க சி,பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் முடிவு.

2ஜி ஸ்பெக்ட்ரம்
இமாலய ஊழல் வழக்கில்
மத்திய அமைச்சர் ப.சிதம்
பரத்தை சேர்ப்பது
தொடர்பான உத்தரவு,
அடுத்த மாதம் 4ம் தேதி
பிறப்பிக்கப்படும் என
டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதி
மன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு ஒரு லட்
சத்து 80 ஆயிரம் கோடி
ரூபாய் இழப்பை ஏற்படுத்
திய 2ஜி ஸ்பெக்ட்ரம்
அலைக்கற்றை ஒதுக்கீடு
தொடர்பான வழக்கில்,
தி.மு.க. முன்னாள் மத்திய
அமைச்சர் ஆ.ராசா கைது
செய்யப்பட்டு, டெல்லி
திஹார் சிறையில் அடைக்
கப்பட்டுள்ளார்.
கருணாநிதி மகள்
கனிமொழியும், இவ்வழக்
கில் கைதாகி டெல்லி
திஹார் சிறையில் அடைக்
கப்பட்டு பின்னர் ஜாமீ
னில் வெளியே வந்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்
கற்றை விற்பனை நடை
பெற்றபோது, மிகக் குறை
வாக விலையை நிர்ண
யித்து ஊழல் செய்ததில்,
அப்போதைய நிதியமைச்
சர் ப.சிதம்பரத்திற்கும்
பங்கு உண்டு என புகார்
தெரிவித்துள்ள ஜனதா
கட்சித்தலைவர் டாக்டர்
சுப்பிரமணியன் சுவாமி,
இந்நிலையில் ப.சிதம்
பரத்தையும் இவ்வழக்கில்
குற்றவாளியாக சேர்க்க
வேண்டும் என்று கோரி,
டெல்லி பாட்டியாலா
ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்
தில் வழக்குத் தொடர்ந்
துள்ளார்.

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் தமிழகத்தில் கல்வி கற்றோர் 80 சதவீதமாக உயர்வு அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பெருமிதம்.

க ல் வி த் து ற யி ல்
தமிழகத்தை முதன்மை
யாக்கிட அனைவரும்
பாடுபடவேண்டும் என்றும்
முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா ஆட்சியில்
தமிழகத்தில் கல்வி கற்
றோர் 80 சதவீதமாக உயர்ந்
துள்ளனர் என்றும் அமைச்
சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
பள்ளிக் கல்வித் துறை
 ஆய்வுக் கூட்டத்தில்
பள்ளிக் கல்வி, விளை
யாட்டு மற்றும் இளைஞர்
நலத் துறை அமைச்சர்
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண
மூர்த்தி ஆற்றிய உரை
வருமாறு:தமிழக முதல மைச்சர்,
புரட்சித் தலைவி அம்மா
அவர்களின் தலைமையி
லான இந்த அரசு பொறுப்
பேற்ற நாள் முதல் பல்
வேறு குறியீடுகள் மற்றும்
புள்ளிவி வரங்களை ஆள்வு
செய்ததில் தமிழ்நாட்டின்
கல்வி கற்றோர் விகிதாச்
சாரம் 80.33 விழுக்காடாக
உள்ளது. இதில் ஆண்க
ளின் கல்வி விழுக்காடு
86.81 ஆகவும் பெண்களின்
கல்வி விழுக்காடு 73.86
ஆகவும் உள்ளது. பெண்
களுக்கான தேசிய தொடக்
கக் கல்வித் திட்டம் 11
மாவட்டங்களில் கல்வி
யில் பின்தங்கியுள்ள 38
வட்டாரங்களில் செயல்
படுத்தப்பட்டு வருகிறது.

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை விலக்கிக்கொண்டதையட்டி எரிவாயு உருளைகள் பொதுமக்களுக்கு சீராக விநியோகம் செய்யப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தல்.

லாரி உரிமையாளர்கள்
வேலை நிறுத்தத்தை விலக்கிக்கொண்டதையட்டி
எரிவாயு உருளைகள்
பொதுமக்களுக்கு சீராக
விநியோகம் செளிணியப்படுவதை கண்காணித்து நடவ
டிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வழங்க
ல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு அலுவலர்கள்
மற்றும் சென்னை நகர
உதவி ஆணையாளர்கள்
பணி ஆய்வுக் கூட்டத்தில்
உணவுத் துறை அமைச்சர்
ஆர்.காமராஜ் வலியுறுத்தினா
ர்.
உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் 20.1.2012 அன்று
சென்னை சேப்பாக்கம்,
எழிலகம் கட்டிடத்தில்
4வது தளத்தில் உள்ள
உணவு பொருள் வழங்கல்
மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக கூட்ட
அரங்கில் மாவட்ட வழங்க
ல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு அலுவலர்கள்
மற்றும் சென்னை நகர
உதவி ஆணையாளர்கள்
பணி ஆய்வுக் கூட்டம்
நடைபெற்றது.

Friday, January 20, 2012

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 சிறப்புப் படி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்
பணிபுரியும் தொகுப்பூதியம் பெறும்
செவிலியர்களுக்கு மாதம்தோறும் சிறப்புப்
படியாக ரூபாய் 500 வழங்க முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தர
விட்டுள்ளார்கள்.
இதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட
தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நலமான நாடே வளமான நாடாகும். மக்கள்
நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின்அனைத்து
வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு
நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு அடித்
தளமாக அமைவது மக்களின் ஆரோக்கியமாகும்.
நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை
அனைவரும் பெற வேண்டும் என்பதன் அடிப்
படையில், தமிழகத்தில் ஏழைஎளிய மக்கள்
அனைவருக்கும் தங்கு தடையின்றி உயர்தர
மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில்
பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் வகுத்து செயல்படுத்தி
வருகிறார்கள்.
இதன் முதல் நடவடிக்கையாக, கடந்தஆண்டு
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்ட
மேற்படிப்பில் சிறப்பு மருத்துவம் பயின்று முடித்த
416 சிறப்பு மருத்துவர்கள், முதலமைச்சர்
புரட்சித்தலைவிஅம்மா அவர்கள்ஆணையின்படி,
2011ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற பணி
நியமனகலந்தாய்வின்மூலம்தேர்ந்தெடுக்கப்பட்டு
அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்
கல்லூரிகளில் காலியாக இருந்த மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களில் நியமிக்கப்-பட்டு
மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி வருகிறார்கள்.
மேலும், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் ஆணையின்படி, அரசு ஆரம்ப
சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 437
மருத்துவ அலுவலர் பணியிடங்கள் வேலை
வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நிரப்பப்பட்டன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு திருத்தி அமைப்பு.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முக்கிய அறிவிப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு
திருத்தி அமைப்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு கீழ்க்கண்டவாறு திருத்தி
அமைக்கப்பட்டுள்ளது.
குழுத் தலைவர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள்
கழகப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முதலமைச்சர்
குழு உறுப்பினர்கள் 1. திரு. இ.மதுசூதனன் அவர்கள்
கழக அவைத் தலைவர்
2. திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள்
கழகப் பொருளாளர், நிதித் துறை அமைச்சர்
3. டாக்டர் திருமதி விசாலாட்சி நெடுஞ்செழியன் அவர்கள்
கழக அமைப்புச் செயலாளர்
4. திரு. அ.தமிழ்மகன் உசேன் அவர்கள்
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
5. திரு. ஏ.ஜஸ்டின் செல்வராஜ் அவர்கள்
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்
6. டாக்டர் பி.வேμகோபால் எம்.பி., அவர்கள்
கழக மருத்துவ அணிச் செயலாளர்.

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 13/2012

அனைத்திந்தியஅண்ணாதிராவிட முன்னேற்றக் கழகப்
பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
(219) சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்-2012
கழக வேட்பாளர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி,
விரைவில் நடைபெற உள்ள சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக,
திருமதி. எஸ். முத்துச்செல்வி, B.E., அவர்கள்
(சங்கரன்கோவில் நகரமன்றத் தலைவர்)
நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, January 19, 2012

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 47 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு 260 கோடி ரூபாயில் 4 இணை சீருடை, 81 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ரூ.95 கோடியில் ஒரு இணை காலணி ரூ.136.50 கோடியில் புத்தகப் பை-ஜாமெட்ரி பாக்ஸ்: முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பயிலும் 46 லட்சத்து
85 ஆயிரத்து 78 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 4 இணை சீருடைகளை ரூ.
259.95 கோடியில் வழங்கவும், 94.76 கோடி செலவில் 81 லட்சத்து 2 ஆயிரத்து
128 மாணவ-மாணவிகளுக்கு ஒரு இணை காலணிகளை வழங்கவும் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். புத்தகப் பைகள், ஜாமெட்ரி
பாக்ஸ், வண்ணப் பென்சில்கள், வரைபடங்கள் ரூபாய் 136.50 கோடியில் வழங்கவும்
உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு
வருமாறு:
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை" என்ற வள்ளுவரின்
வாக்கிற்கு ஏற்ப கல்வியே மிகச் சிறந்த செல்வம்
என்று சொன்னால் அது மிகையாகாது.
கல்வியானது நற்பண்புகளையும், நல்ல
குறிக்கோள்களையும் குழந்தைகளிடையே
விதைத்து அவர்களை சமுதாய உணர்வு உள்ள
நல்ல குடிமக்களாக உருமாற வழிவகை செய்கிறது.
இதனை நன்கு உணர்ந்த முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மாநிலத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தரமான
கல்வியை, அடிப்படை உள்கட்டமைப்பு
வசதிகள் நிறைந்த இன்பமான சூழ்நிலையில்
பெறுவதற்கான பல்வேறு முன்னோடி
நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
முழுக்கால் சட்டை - சல்வார் கமீஸ்
இதன் அடிப்படையில் 2012-13ஆம் கல்வியாண்
டு முதல் தொடக்கக் கல்வி மற்றும்
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும்
பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப்
பள்ளிகள் ஆகியவற்றில் புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 1வது
வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும்
மாணவ-மாணவிகளுக்கு, தற்பொழுது
வழங்கப்பட்டு வரும் இரண்டு இணை சீருடையுடன் கூடுதலாக இரண்டு இணை சீருடை
அதாவது மொத்தம் நான்கு இணை சீருடை
வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதில் 6ஆம்
வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும்
மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு
பதிலாக முழுக் கால்சட்டையும்,
மாணவியர்களுக்கு பாவாடை தாவணிக்குப்
பதிலாக சல்வார்-கமீசும் வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம் 23 லட்சத்து
33 ஆயிரத்து 418 மாணவர்களும், 23 லட்சத்து
51 ஆயிரத்து 660 மாணவிகளும் என மொத்தம்
46 லட்சத்து 85 ஆயிரத்து 78 பள்ளி மாணவ,
மாணவியர் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு
259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதல்
செலவு ஏற்படும்.

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் பரிந்துரைப்படி 4 தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்.

தமிழக அமைச்சரவை
யில் 4 அமைச்சர்களின்
இலாகாக்களை, முதல
மைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் மாற்றிய
மைத்துள்ளார்கள்.
அதன்படி, அமைச்சர்
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண
மூர்த்தி இதுவரை வகித்து
வந்த வணிகவரி, பத்திரப்
பதிவு மற்றும் முத்திரைத்
தாள், சட்டம் ஆகிய துறை
கள் அமைச்சர் சி.வி.சண்
முகத்திற்கு அளிக்கப்பட்
டுள்ளன.
சி.வி.சண்முகம், வணிக
வரி, பத்திரப்பதிவுத்துறை,
சட்டம், நீதிமன்றங்கள்
மற்றும் சிறைத்துறை
அமைச்சர் என அழைக்கப்
படுவார்.
பணியாளர் நலன், நிர்
வாக சீர்திருத்தங்கள்,ஊழல்
தடுப்பு ஆகிய இலாகாக்
களையும் சி.வி.சண்முகம்
தொடர்ந்து வகிப்பார்.
அமைச்சர் சி.வி.சண்
முகம் இதுவரை வகித்து
வந்த பள்ளிக்கல்வித்துறை,
தொல்லியல்,விளையாட்டு,
இளைஞர் நலன், தமிழ்
ஆட்சிமொழி மற்றும்
தமிழ் கலாச்சாரம் ஆகிய
துறைகள் அமைச்சர் அக்ரி
எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு
ஒதுக்கப்பட்டுள்ளன. அக்ரி
எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,
பள்ளிக் கல்வி, விளை
யாட்டு மற்றும் இளைஞர்
நலத் துறை அமைச்சர்
என அழைக்கப்படுவார்

தீ விபத்து எதிரொலி: சமூக நலத்துறை அலுவலகம் எழும்பூருக்கு மாற்றம்.

எழிலகம் பின்புறம் உள்ள அரசு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு இயங்கி வந்த சமூக நலத்துறை அலுவலகம் எழும்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை எழிலகம் பின்புறம் உள்ள அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த கணிபொறிகள், அரசின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இங்கு சமூக நலத்துறை, சத்துணவுத் துறை வணிகத்துறை ஆகிய மூன்று துறைகளின் தலைமை அலுவலகங்களும் இயங்கி வந்தன. இதற்கு அருகில் தொழிற் சாலைகளின் ஆய்வுத்துறை உள்ளது. அங்கு தீ பரவு வதற்குள் தீயணைப் புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பொங்கல் விடுமுறை முடிந்து அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அலுவலகம் முழுவதும் தீயினால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்து வேதனை அடைந்தனர். பின்னர் அனைவரும் தங்கள் பணியை எங்கே செய்வது என தெரியாமல் உயர் அதிகாரிகளின் உத்தரவிற்காக அங்கே காத்திருந்தனர். காலை சுமார் 10 மணி அளவில் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டதாக தகவல் தரப்பட்டது. இதையடுத்து, அவர்கள் புதிய இடத்திற்கு பணியாற்ற கலைந்து சென்றனர்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் இரும்பாலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.

தி.மு.க. முன்னாள்
அமைச்சர் சுரேஷ்
ராஜனுக்குச் சொந்தமாக,
நெல்லை மாவட்டத்தில்
உள்ள இரும்பு ஆலையில்,
லஞ்ச ஒழிப்புத்துறை
போலீசார், மீண்டும்
சோதனை நடத்தினர்.
முந்தைய தி.மு.க.
ஆ ட் சி யி ன்  ப து ,
அப்போதைய அமைச்சர்
சுரேஷ் ராஜன், அரசு
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, முறைகேடு
களில் ஈடுபட்டதாக புகார்
எழுந்துள்ளது. கன்னியா
குமரி மாவட்டத்தில்
அவர் பெருமளவில்
சொத்துக்களை குவித்
திருப்பதுடன், நெல்லை
மாவட்டம் பழவூரில்,
இரும்பு ஆலை ஒன்றையும்
நடத்தி வருகிறார்.

கழகப்பொதுச்செயலாளர் - முதல்வர் புரட்சித்தலைவி அம்மா இரங்கல்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்,
தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக் கழக
செயலாளர் ஜி.ராதா மரணமடைந்து
விட்டார் என்ற செய்தி கேட்டு, கழகப்
பொதுச் செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து கழகப் பொதுச்
செயலாளர் முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்களின் இரங்கல்
செய்தி வருமாறு:
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்,
தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக் கழகச்
செயலாளர் ஜி.ராதா மரணமடைந்து
விட்டார் என்ற செய்தி கேட்டு
வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின்
மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த
ஆரம்ப கால கழக உடன்பிறப்பு ராதா,
தாம்பரம் நகரக் கழகச் செயலாளர்,
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்,
கழகப் பொதுக்குழு உறுப்பினர் மற்றும்
நகர மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட
பல்வேறு பொறுப்புகளில் பணி
யாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புச் சகோதரர் ராதாவை இழந்து
வாடும் அவரது மனைவியும், தாம்பரம்
நகர மன்ற 33ஆவது வார்டு
உறுப்பினருமான காந்திமதிக்கும், அவரது
குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த
இரங்கலையும், அனுதாபத்தையும்
தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது
ஆன்மா இறைவன் திருவடி நிழலில்
அமைதி பெற எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் தமது இரங்கல் செய்தியில்
கூறியுள்ளார்கள்.

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மாவிடம் ரூ. 4.64 கோடியை கழக வளர்ச்சி நிதியாக கழகத்தினர் வழங்கினர்.

கழக நிறுவனர் பாரத் ரத்னா டாக்டர்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
பிறந்தநாள் விழாவில் பங்கேற்க தலைமைக்
கழகம் வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களிடம் கழகத்தினர் ரூ. 4.64
கோடி ரூபாயை கழக வளர்ச்சி நிதியாக
அளித்தனர்.
இதுகுறித்து தலைமைக் கழகம் விடுத்துள்ள
செய்திக் குறிப்பு வருமாறு:
கழகப் பொதுச்செயலாளர், முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களை,
தலைமைக் கழகத்தில் நேற்று (17.1.2012 -
செவ்வாய்க்கிழமை), திண்டுக்கல் மாவட்டக்
கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு
மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சருமான
நத்தம் இரா.விசுவநாதன் நேரில் சந்தித்து,
திண்டுக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில்,
"கழக வளர்ச்சி நிதியாக" 1 கோடி ரூபாயை
வழங்கினார்.
கழகப் பொதுச்செயலாளர், முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களை, ஈரோடு
மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும்,
பொதுப்பணித் துறை அமைச்சருமான கே.வி.
இராமலிங்கம் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த
நிர்வாகிகள் நேரில் சந்தித்து, ஈரோடு மாநகர்
மாவட்டக் கழகத்தின் சார்பில், "கழக வளர்ச்சி

வணிக பரிமாற்றங்களுக்கு ஏற்ப துறையின் செயல்திறனை அதிகரிக்க வணிக வரித்துறையின் அனைத்து பணிகளையும் ரூ.231 கோடியில் கணினிமயமாக்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஆணை.

வணிகப் பரிமாற்றங்களுக்கு ஏற்ப
துறையின் செயல்திறனை அதிகரிக்க
வணிக வரித்துறையின் அனைத்துப்
பணிகளையும் ரூ.230.96 கோடியில்
கணினி மயமாக்க முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுதொடர்பான தமிழக அரசின்
செய்திக்குறிப்பு வருமாறு:
மக்களுக்கான திட்டங்களையும், வளர்ச்சிப்
பணிகளையும் வலுவான நிதி ஆதாரங்கள்
மூலம் தான் செயல்படுத்த முடியும். மாநில
அரசின் வரிவசூல் மூலம் ஈட்டுகின்ற நிதி
ஆதாரத்தைக் கொண்டு பல்வேறு நலத்
திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநிலத்தின் மொத்த வருவாயில் மூன்றில்
இரண்டு பங்கினை ஈட்டித்தருவது வணிகவரித்
துறையாகும். இதன் மூலம் மாநிலத்தின்
வளர்ச்சிக்கும் மற்றும் மக்கள் நலத் திட்
டங்களுக்கும் தேவையான நிதி ஆதாரங்களை
திரட்டுவதில் இத்துறை முக்கியமான பங்கு
வகிக்கிறது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த
வணிகவரித்துறையின் பணிகளில் அடிப்
படைப் பணிகள் மட்டுமே கணினிமயமாக்
கப்பட்டுள்ளன. இதனை உணர்ந்த தமிழக
முதலமைச்சர் புரட்சித்தலைவி அவர்கள்
தற்போது பெருகி வரும் வணிக பரிமாற்றங்க
ளுக்கு ஏற்ப துறையின் செயலாக்கத்திறன்
அதிகரிக்கப்பட வேண்டும் என்பதைக்
கருத்தில் கொண்டு, இத்துறையின் அனைத்து
பணிகளையும் முழுவதுமாக கணினிமயமாக்
க உத்தரவிட்டுள்ளார்கள்.

Tuesday, January 17, 2012

இந்திய அரசியலை தீர்மானிக்கும் இணையில்லா இடத்திற்கு கழகத்தை உயர்த்திட உறுதி ஏற்போம் கழகப் பொதுச்செயலாளர்-முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மடல்

இதய தெய்வம் புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான,
என் உயிரினும் மேலான
எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!
பெருமிதம் கொள்ளத் தக்க தன் வாழ்நாள்
சேவைகளாலும், தன்னிடமிருந்து இந்தச் சமூகம்
பெற்றுக் கொண்டதெல்லாம் நல்லதை மட்டுமே
என்னும் பெருமை கொண்ட வாழ்வாலும்,
உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில்
எல்லாம் நிலைத்த இடம் பிடித்து நினைவில்
இருந்து நீங்காது வாழுகின்ற காவியமாம், கழக
நிறுவனத் தலைவர் நம் இதய தெய்வம் புரட்சித்
தலைவர் எம்.ஜி.ஆரின் 95ஆவது பிறந்த நாளை
கொண்டாடுவதில் நாம் அனைவரும் அளவற்ற
மகிழ்ச்சியும், எல்லையில்லா இன்பமும்
கொள்கிறோம்.
இந்த நன்னாளில், அந்த மாசற்ற தலைவரின்
மங்காத நினைவுகளை, புரட்சித்தலைவர் மீது
அளவற்ற அன்பும், பற்றுதலும் கொண்டிருக்கும்
கழகக் கண்மணிகளாகிய உங்களோடும், தமிழக
மக்களோடும் பகிர்ந்து கொள்வதில் எல்லையில்லா
மகிழ்ச்சி அடைகிறேன்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்தை தொடவிருக்கும் நிலையிலும், அவரது நிலைத்த புகழும்,
நிகரில்லா அழகும், நீதி உரைத்த அவரது
தெளிவும், நேர்மைக்கே எந்நாளும் அஞ்சாது
வாழ்ந்திட்ட அவரது நேர்மைத் திடமும் இன்றும்
தமிழக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.
என் குடும்பம், என் மனைவி, என் துணைவி,
என் மகன்கள், என் மகள்கள், என் பேரன், என்
பேத்திகள் என்று தனக்காக மட்டுமே வாழும்
மனிதர்களை, தன்னை சுற்றியே சிந்திக்கும் சுயநலமிகளை காலம் சக்கையென துப்பிவிடுகிறது;
தூரவே வீசிவிடுகிறது. அப்படிப்பட்டவர்களின்
வாழ்க்கைப் பயணம் பதிவுகளும், சுவடுகளும்
இல்லாத பாலைவனம் ஆகிவிடுகிறது.

உழைப்பால் உயர்ந்த உத்தம தலைவனுக்கு 95 வது பிறந்தநாள் விழா.

உழைப்பால் உயர்ந்த உத்தம தலைவனுக்கு 95  வது பிறந்தநாள் விழா.
 குடியாத்தம் நகர கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட காட்சிகள்.









 

நகர்ப்புறப் பகுதிகளில் அடிப்படை வசதி - பேருந்து நிலையம் - பூங்காக்கள் ரூ.6,654 கோடியில் அமைக்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு மாநகராட்சி - நகராட்சி - பேரூராட்சியில் முதல் கட்டமாக பணிகளை மேற்கொள்ள ரூ.757 கோடி ஒதுக்கீடு

நகர்ப்புற பகுதிகள் அடிப்படை வசதிகள்,
பேருந்து நிலையங்கள், பூங்காக்களை
ரூ.6,654.03 கோடியில் அமைக்க
உத்தரவிட்டுள்ள முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள், முதல்
கட்டமாக ரூ.757 கோடியே 28 லட்சத்தை
அதற்காக ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு வருமாறு
வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கட்தொகை
மற்றும் தொடர்புடைய வணிக நடவடிக்கை
களுக்கு ஏற்ப நகரக் கட்டமைப்புகளை
அதிகப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும்,
தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் தலைமையிலான அரசு
முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
வளர்ந்துவரும் நகரங்கள்
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை
கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 48.45
விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து
வருகின்றனர். இது வரும் 20 ஆண்டுகளில்
அதாவது 2030-ம் ஆண்டில் 67 விழுக்காடாக
உயர வாய்ப்பு உள்ளது. மக்கள்
வேலைவாய்ப்புக்காக அருகிலுள்ள
நகரங்களுக்கு அதிக அளவு இடம்
பெயர்வதாலும், நகரங்கள் அதிவேக
வளர்ச்சியடைந்து வருவதாலும், மக்களுக்கு
தேவையான அடிப்படை வசதிகளை செய்து
கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் தலைமையிலான அரசு
"ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்"
என்ற ஒரு திட்டத்தினை துவக்க முடிவு
செய்துள்ளது.

இன்று 95வது பிறந்த நாள்: தலைமைக் கழகத்திலுள்ள கழக நிறுவனர் பாரத் ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் புரட்சித்தலைவி அம்மா மரியாதை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா-புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைகளை திறந்து வைத்து மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குகிறார்கள்

கழக நிறுவனர் புரட்சித்தலைவர் டாக்டர்
எம்.ஜி.ஆர். அவர்களின் 95வது பிறந்த
நாளான இன்று (17ம்தேதி) தலைமைக்
கழகத்திலுள்ள அவரது திருவுருவச்
சிலைக்கு, கழகப் பொதுச் செயலாளர் முதல்வர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மலர் மாலை
அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து டாக்டர் புரட்சித்தலைவர்
பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டு
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில்
நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா, கழக
நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
ஆகியோரின் திருவுருவச் சிலைகளை திறந்து
வைத்து மாணவ- மாணவிகளுக்கு
நிதியுதவியும் வழங்குகிறார்கள்.
அளப்பரிய மனித நேயராகவும்,
அப்பழுக்கற்ற தூய தொண்டனாகவும்
தமிழகத்து மக்கள் குறிப்பாக ஏழை எளிய மக்க
ளின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர்-
நமது இதயதெய்வம் மக்கள் திலகம்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார்.

மக்களை நாடி அரசு என்ற தமிழக அரசின் நோக்கம் நிறைவேற அனைத்துத் துறைகளிலும் மின் ஆளுமை புரட்சி ஏற்பட "மின் ஆளுமைக்கான முதலமைச்சரின் உயரிய விருதுள் ஆண்டுதோறும் வழங்கப்படும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு

மக்களை நாடி அரசு என்ற தமிழக அரசின் நோக்கம் நிறைவேறவும், அரசுத்
துறைகளை ஊக்குவித்திடவும், மின் ஆளுமை புரட்சி ஏற்பட "மின் ஆளுமைக்கான
முதலமைச்சரின் உயரிய விருது" ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றும் மூன்று
பிரிவின் கீழ் ரூ.30 ஆயிரம் மதிப்பில் கோப்பை பரிசாக வழங்கப்படும் என்றும்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு வருமாறு:
அரசு நடைமுறைகளில் புதுமையை புகுத்தி,
'அரசை தேடி மக்கள்' என்ற நிலையை மாற்றி
'மக்களை நாடி அரசு''என்ற நிலையை தகவல்
தொழில்நுட்பத்துறை மூலம் ஏற்படுத்தும்
வகையில் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் தலைமையிலான அரசு
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொங்கல் திருநாளையட்டி காவல்துறை-தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை-சிறைத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 1686 பேருக்கு முதலமைச்சரின் சிறப்புப் பணி பதக்கம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு

பொங்கல் திருநாளையட்டி தமிழக
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்
பணிகள் துறை, சிறைத்துறை ஆகிய வற்றில்
சிறப்பாக பணிபுரிந்த 1686 பேருக்கு முதல
மைச்சரின் சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்
படும் என முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2012-ஆம்ஆண்டுபொங்கல் திருநாளையட்டி,
தமிழகக் காவல் துறையில் பணியாற்றும்
காவலர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும்
அதற்குச் சமமான பதவியில் உள்ளவர்கள் என
மொத்தம் 1500 பேருக்கு 'தமிழக முதலமைச்சரின்
காவலர் பதக்கம்' வழங்கப்படும் என்றும்,
இப்பதக்கம் பெறுவோர் ஒவ்வொருவருக்கும்
2012 பிப்ரவரி முதல் மாதாந்திரப்படியாக 100
ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
ஆணையிட்டுள்ளார்கள்

புரட்சித்தலைவி அம்மா அரசின் துரித நடவடிக்கையால் விழுப்புரம் மாவட்டத்தில் மின்விநியோகம் சீரடைந்தது பொதுமக்கள் மகிழ்ச்சி.

விழுப்புரம் மாவட்டத்
தில் 'தானே' புயலால் மின்
விநியோகம் பாதிக்கப்
பட்டதையடுத்து, போர்க்
கால அடிப்படையில்
பணிகள் மேற் கொள்ளப்
பட்டு, மின் இணைப்பு
வழங்கப்பட்டுள்ளதால்,
பொதுமக்கள் மிகுந்த
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
'தானே' புயல் காரண
மாக, கடலூர் மற்றும்
விழுப்புரம் மாவட்டங்
களில் பெரும் சேதம்
ஏற்பட்டதோடு, மின்
விநியோகமும் கடுமையாக
பாதிக்கப்பட்டது.

அரசு பதவி பெற்றுத்தருவதாக கருணாநிதியின் மகள் செல்வியின் உறவினர் ரூ.69 லட்சம் மோசடி காவல்துறை ஆணையரிடம் புகார்.

டி . எ ன் . பி . எ ஸ் . சி . ,
உறுப்பினர் பதவி பெற்றுத்
தருவதாக உறுதியளித்து 69
லட்சம் ரூபாய் பெற்று
மோசடி செய்ததாக
கருணாநிதியின் மகள்
செல்வி யின் உறவினர்
மீது சென்னை காவல்
துறை ஆணையரிடம்
புகார் அளிக்கப்பட்டுள்
ளது.
மதுரை வண்டிபுதூ
ரைச் சேர்ந்த நல்லதம்பி
என்பவர், டி.என்.பி.எஸ்.சி.,
உறுப்பினர் பதவியை
பெறுவதற்காக சென்னை
வேளச்சேரியில் தி.மு.க.
பகுதி செயலாளராக
உள்ள ரவி மற்றும் ரமேஷ்
ஆகியோருடன் தொடர்பு
கொண்டு முயற்சி செய்த
தாகவும், அதற்காக
கருணாநிதியின் மகள்
செல்வியின் மிக நெருங்கிய
உறவினரான உமா
மகேஸ்வரி என்பவரிடம்
69 லட்சத்தை பல கட்டங்
களாக கொடுத்ததாகவும்,
ஆனால் தனக்கு டி.என்.
பி.எஸ்.சி., உறுப்பினர்
பதவியை பெற்றுத்
தராமல் ஏமாற்றியதுடன்
பணத்தையும் திரும்பித்
தராமல் உமா மகேஸ்வரி
மோசடி செய்ததாகவும்
சென்னை பெருநகர
காவல் துறை ஆணையரி
டம் புகார் அளித்துள்ளார்.

Friday, January 13, 2012



இருந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
இதயக்கனிய உன்னை வாங்குகிறோம்......



 

பொங்கல் நல்வழுதுக்கள்.

அனைவருக்கும் குடியாத்தம் நகர கழகத்தின் சார்பில் பொங்கல் நல்வழுதுக்கள்.



தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 11/2012

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 11/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதா அவர்களின்
முக்கிய அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் - இலக்கிய அணி
கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும்
கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்
பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு
ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக்
கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்
பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட
காரணத்தினாலும், விருதுநகர் மாவட்டத்தைச்
சேர்ந்த,
திரு.ஷி.றி.செண்பகமூர்த்தி,
(மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர்)
இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்
பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில்
இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன்
எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது
எனக் கேட்டுக் கொள்கிறேன்.

பொங்கல் திருநாளுக்கு பிறந்த ஊருக்கு சிரமமின்றி சென்று திரும்ப ஜன. 12 முதல் 22 வரை 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி ஜன.14 முதல் 17 வரை சென்னை சுற்றுலா மையங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகையையட்டி பிறந்த ஊருக்கு மக்கள் சிரமமின்றி சென்றுவர
ஜனவரி 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10,090 சிறப்பு பேருந்துகளை
இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யும்
வசதியும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கேற்ப
செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
பயிர் விளையக் காரணமாய் உள்ள
பகலவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி
செலுத்தும் தமிழர் திருநாளாம் பொங்கல்
பண்டிகையினை தங்கள் சொந்த ஊர்களில்
உறவினர்களுடனும், நண்பர்களுடனும், தமிழ்
மக்கள் கொண்டாடுவது வழக்கம்.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை
தமிழக மக்கள் பொலிவுடன் கொண்டாட
தங்கள் பிறந்த ஊருக்கு எவ்வித சிரமமுமின்றி
சென்று திரும்பும் வகையில், பொங்கல் திருநாளை ஒட்டி, அரசு போக்குவரத்துக் கழகங்களின்
சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்க
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
சென்னையில் சிறப்பு ஏற்பாடு
இதன்படி, 12ஆம் தேதி அன்று 1,115 பேருந்துகளும், 13 ஆம் தேதி அன்று 1,965 பேருந்துகளும்,
14ஆம் தேதி அன்று 1,965 பேருந்துகளும் மற்றும்
15ஆம் தேதியன்று பயணிகளின் தேவைக்கேற்ப
உரிய எண்ணிக்கையிலும் பேருந்துகளை மாநில
த்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்க முதல
மைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
ஆணையிட்டுள்ளார்கள். இதில், அனைத்து
மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின்
முக்கிய பகுதிகளுக்கு சென்னை, கோயம்பேடு
புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இம்மாதம்
12ஆம் தேதி அன்று 557 பேருந்துகளும், 13ஆம்
தேதி அன்று 1,257 பேருந்துகளும் மற்றும் 14ஆம்
தேதி அன்று 1,257 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், பொங்கல் திருநாளை குடும்பத்தின
ருடன் குதூகுலமாக கொண்டாடி மீண்டும்
பணி நிமித்தமாக ஊர் திரும்பிடும் பொது மக்களின் நலன் கருதி இதே அளவிலான பேருந்துகளை 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை
இயக்கிடவும் முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில்
கொண்டு, அவர்கள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக, பொங்கல் பண்டிகையை
ஒட்டி இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கும், உடனடி இணையதள வழி பதிவு திட்டத்தின் கீழ் பயணச்சீட்டு முன்பதிவு செய்திடும் வசதியையும்
வழங்கிட முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் தீயநோக்கத்துடன் அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
பற்றி அவதூறு செய்தி
வெளியிட்ட நக்கீரன் ஏடு
பகிரங்கமான மன்னிப்புக்
கோர வேண்டும் என்று
சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
முதல் பக்கத்திலேயே
நிபந்தனையற்ற மன்னிப்புக்
கோரும்செய்தி வெளியிடப்பட
வேண்டும் எனவும் நீதி
மன்றம்ஆணையிட்டுள்ளது.
நக்கீரன் இதழ் மீது
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்
பு வழக்கில்,
சென்னை உயர்நீதிமன்றம்
நேற்று தீர்ப்பு வழங்கியது.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
குறித்து அவதூறு செய்தி
வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை, வரும் இதழிலேயே
முதல் பக்கத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக்
கோரும் செய்தி வெளியிட வேண்டும் என்று நீதிமன்
றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
பற்றி செய்தி வெளியிடுவதா
க இருந்தால், அதனை
தொலைநகல் மூலம்
அனுப்பி அவரது விளக்கம்
பெற்றபின்னரேவெளியிட
வேண்டும் என்று, கடந்த
2006ம் ஆண்டு நக்கீரன்
பத்திரிகைக்கு சென்னை
உயர்நீதிமன்றம் உத்தர
விட்டிருந்தது.

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவின்பேரில் போர்க்கால அடிப்படையில் மின்சார சீரமைப்பு பணிகள்; நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் தீவிரம்

முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்க
ளின் உத்தரவின் பேரில்,
கடலூர் மாவட்டம் முழு
வதும் பொங்கல் பண்டி
கைக்குள் சீரான மின்
விநியோகம் கிடைக்கச்
செய்யும் வகையில் அதற்
கான பணிகள் தொடர்ந்து
முழுவீச்சில் நடைபெற்று
வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் 4 வட்டங்களில் மாணவர்களுக்கு மிதிவண்டி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில்
4 வட்டங்களில் மாணவர்
களுக்கு விலையில்லா
மிதிவண்டிகள், மிக்ஸி,
கிரைண்டர், மின்
விசிறிகளை அமைச்சர்
எடப்பாடி கே.பழனிச்சாமி
வழங்கினார்.
சேலம், வாழப்பாடி
ஆத்தூர், கெங்கவல்லி
வட்டங்களில் பல்வேறு
இடங்களில் மாணவ,
மாணவிகளுக்கு விலை
யில்லா சைக்கிள் மற்றும்
சிறப்பு ஊக்கத் தொகை,
மக்களுக்கு விலையில்லா
மிக்ஸி, கிரைண்டர், மின்
விசிறிமற்றும்விலையில்லா
ஆடுகள் வழங்கும் நிகழ்ச்
சியில் கலந்து கொண்டு
நெடுஞ்சாலை மற்றும் சிறு
துறைமுகங்கள் துணை
அமைச்சர் எடப்பாடி
கே.பழனிச்சாமி பயனாளி
களுக்கு நலத்திட்ட உதவி
களை வழங்கினார். அதன்
முதல் நிகழ்ச்சியாக கரிய
கோயில்அணையிலிருந்து
பாசன வசதிக்காக அணை
யிலிருந்து தண்ணீரை
திறந்து விடும் நிகழ்ச்சிக்கு
மாவட்டஆட்சித்தலைவர்
க.மகரபூஷணம் தலைமை
வகித்தார். சட்டமன்ற
உறுப்பினர்கள்செ.பெருமாள்,
எஸ்.மாதேஸ்வரன்,மாவட்ட
ஊராட்சித் தலைவர்
எஸ்.சதீஸ்குமார், பெத்த
நாயக்கன்பாளையம்ஒன்றியக்
குழுத்தலைவர் ஏ.ஆர்.
இளங்கோவன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்.

காத்திருப்போர் பட்டி
யல் மேலும் அதிகரித்தால்
பொங்கல் பண்டிகைக்கு
கூடுதல் ரயில்கள் இயக்கப்
படும் என்று சென்னை
கோட்டரயில்வேமேலாளர்
அனந்தராமன் கூறினார்.
தெற்கு ரயில்வே மத்திய
மாவட்டத்தைச் சேர்ந்த
சாரண மற்றும் சாரணியர்
சார்பில் ரயில்வே பாது
காப்பு விழிப்புணர்வு சைக்
கிள் பேரணி தொடக்க
நிகழ்ச்சி சென்னை சென்டி
ரல் ரயில் நிலையத்தில்
நடைபெற்றது.
பேரணியை சென்னை
கோட்ட ரயில்வே மேலா
ளர் கொடி அசைத்து
தொடங்கி வைத்து பேசி
னார். இணை மேலாளர்
ஜான்தாமஸ் முன்னிலை
வகித்தார். 50க்கும் மேற்
பட்ட சாரணசாரணி
யர்கள் இதில் கலந்து
கொண்டனர்.சென்டிரலில்
தொடங்கிய இந்த சைக்கிள்
பேரணி தாம்பரம், செங்
கல்பட்டு, அரக்கோணம்,
காஞ்சீபுரம், காட்பாடி,
ஆம்பூர் வழியாக ஜோலார்
பேட்டையை வருகிற 13ந்
தேதி சென்றடைகிறது.

Thursday, January 12, 2012

அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை கிடைக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வரை பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா தொடங்கி வைத்தார்

பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்கள். இந்த திட்டத்தின்மூலம் ஆண்டுக்கு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் வரை ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறலாம். செய்திக் குறிப்பு வருமாறு:- தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 11.1.2012அன்றுதலைமைச் செயலகத்தில், அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை கிடைக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினைதொடங்கி வைத்தார்கள்.முந்தைய அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அனைவருக்கும் பயன்படக் கூடிய வகையில் அமையப் பெறவில்லை. அந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்குஆண்டுகளுக்கு அனுமதிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை ஒரு லட்சம் ரூபாய் ஆகும். குடும்பத்திலுள்ள ஒரு நபர் இந்தத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள முழு காப்பீட்டுத் தொகையையும் பயன்படுத்தி விட்டால், அவரோ அல்லது அவரது மற்ற குடும்ப உறுப்பினர்களோ திட்டம் அமலில் உள்ள நான்கு ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் எந்தப் பயனையும் பெற இயலாது. மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகையான ஒரு லட்சம் ரூபாய், சில உயிர் காக்கும் பெரிய அறுவை சிகிச்சைகளுக்குப் போதுமானதாக இல்லை. இந்தத் திட்டத்தில் மருத்துவப்பரிசோதனைகளுக்கானகட்டணங்களை வழங்கவும் வழிவகைசெய்யப்படவில்லை.ஸ்கேன் போன்ற அதிக செலவு ஏற்படும் பரிசோதனைகளுக்குக் கூட இந்தத் திட்டத்தின் மூலம் கட்டணங்கள் வழங்க வழிவகை செய்யப் படவில்லை. இதனால் ஏழை நோயாளிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக கடன் வாங்கித் தான் செலவழிக்கும் நிலை இருந்தது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் பிந்தைய பாதுகாப்பு மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சை வழங்கவும் அந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே, முந்தைய அரசால் செயல்படுத்தப் பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையிலும், ஆளுநர் அவர்களின் உரையில் ?அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒருபுதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்? என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு ஏற்ப, ஏழை எளிய, நலிந்த மக்கள் பயன்பெறும் வகையில் ?முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்? என்ற புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்முறைப் படுத்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு வருடம் 1 லட்சம் ரூபாய் வீதம் 4 வருடங்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரையும், சில குறிப்பிட்டசிகிச்சைமுறைகளுக்குஒருவருடத்திற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய வரை வழங்கப்படும். இத்திட்டத்தினால் 1 கோடியே 34 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.மேலும், இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தில்,பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 23 நோய் அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செயப்பட்டுள்ளது. சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும், காப்பீட்டுக்காக வரையறுக்கப் பட்ட தொகையில் அடங்கும். அறுவைசிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் செலவழிக்கப்பட்ட கட்டணத் தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும்குறைந்தது ஒரு மாவட்டத்திற்கு 6 மருத்துவமனைகளும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற மாநகரங்களில் கூடுதல் மருத்துவமனைகளும், என மொத்தம் 250மருத்துவமனைகளுக்குக் குறையாமல்  தமிழகம் முழுவதும் இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகள் முகாம்கள் நடத்த வேண்டுமென்ற விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால்ஏழை-எளியமக்களின்நோய்களைக் கண்டறியவும், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர் களிடம் 11.1.2012 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்கள். மேலும், 7 பயனாளிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கியும், 7 பயனாளி களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஒப்புதல் கடிதத்தையும்வழங்கினார்கள். இந்நிகழ்வின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,தலைமைச்செயலாளர்,மக்கள் நல்வாழ்வு மற்றும்குடும்பநலத்துறையின்முதன்மைச்செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

தானே? புயலால் பாதிக்கப்பட்ட 3.50 லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை திரும்பப் பெற 2.24 லட்சம் ஹெக்டேர் பரப்பில் முற்றிலும் சேதமடைந்த வேளாண்-தோட்டக் கலை பயிர் இழப்புகளுக்காக ரூ. 210 கோடி நிவாரண உதவித் தொகை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு

தானே? புயலால் பாதிக்கப்பட்ட 3.45 லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை திரும்பப்
பெற 2.24 லட்சம் ஹெக்டேர் நிலப் பரப்பில் பயிரிடப்பட்ட, முற்றிலும் சேதமடைந்த பயிர்இழப்புகளுக்காக மட்டும் ரூ. 210 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும்,முற்றிலும் சேதமடைந்த தோட்டக்கலை பயிர்களுக்கு மீண்டும் பயிர் செய்வதற்கு விலைஏதுமின்றி மரக்கன்றுகளும், ஓராண்டு காலத்திற்கு பராமரிப்பு மற்றும் விவசாயபணிகளுக்கான செலவுகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர்புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அறிக்கை வருமாறு:-
30.12.2011அன்றுபுதுச்சேரிக்கும் கடலூருக்கும்
இடையே கரையைக் கடந்த ?தானே? புயல்
தமிழகத்தை தாக்கி, கடலூர் மற்றும் விழுப்புரம்
மாவட்டங்களில் மிகப் பெரும் சேதத்தை
ஏற்படுத்திச் சென்றுவிட்டது. இந்தப் புயலின்
கோரத் தாக்குதல் காரணமாக, கடலூர் மற்றும்
விழுப்புரம் மாவட்டங்களின் அடிப்படை
கட்டமைப்புகள் முற்றிலும் சீரழிந்துவிட்டன.
குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் மின்சார வசதி
ஆகியவை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சுமார் 4 லட்சம் குடிசை மற்றும் ஓடு வேய்ந்த
வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதனையடுத்து, அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்
டு, சீரமைப்புப் பணிகள் போர்க்கால
அடிப்படையில்,முழுவீச்சில்நடைபெற்றுவருவதால்,
மக்களுக்குத் தேவையான குடிநீர் எவ்வித
இடையூறும்இன்றிவழங்கப்பட்டுவருகிறது.கடலூர்
மாவட்டம் முழுமைக்கும் புதிதாக மின்னமைப்பு
ஏற்படுத்துவது போல உள்ள சவாலானபணியை
மின்சார வாரியம் செம்மையாக செய்து வருகிறது.
மின்சார வசதியை சீரமைக்கும் பணியில் 3,000
பணியாளர்கள் அல்லும் பகலும் அயராது
பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 5,000
பணியாளர்கள் மின்சார சீரமைப்புப்பணிகளில்
ஈடுபடுத்தப்பட உள்ளனர். மின்சார கட்டமைப்
புக்கு ஏற்பட்ட இது போன்ற பேரழிவை
சீர்செய்ய குறைந்தது 6 மாத காலம் ஆகும்
என்ற போதிலும், எனது தலைமையிலான
அரசின் இடைவிடாத முயற்சியினால், கடலூர்
மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள
அனைத்து வீடுகளுக்கும் பொங்கல் திரு
நாளுக்குள் மின் வசதி வழங்கிட நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.
?தானே? புயல் காரணமாக தமிழ்நாட்டில்
சுமார் 1.76 லட்சம் ஹெக்டேர் பரப்பில்
பயிரிடப்பட்ட வேளாண் பயிர்களும், 0.48 லட்சம்
ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட தோட்டக்
கலை பயிர்களும், ஆக மொத்தம் 2.24 லட்சம்
ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்கள்
முற்றிலும் சேதமடைந்துள்ளன.இதன்விளைவாக,
விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டு அவர்களது பொருளாதார நிலை
வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனைக் கருத்தில்
கொண்டு பயிர் சேதங்களுக்கு மத்திய அரசின்
பேரிடர்நிவாரணவரையறையில்குறிப்பிட்டுள்ளதை
விட அதிகமான நிவாரணத் தொகை வழங்க
நான் ஆணையிட்டுள்ளேன். பயிர் இழப்புகளுக்
காக மட்டும் 210 கோடி ரூபாய் அளவுக்கு
நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு பயிர் சேதங்களுக்காக நிவாரண
உதவித் தொகைகள் வழங்கப்பட்டாலும், பலா,
முந்திரி போன்ற தோட்டப் பயிர்களின் மூலம்
வருவாய் ஈட்டி வந்த விவசாயப் பெருங்குடி
மக்களின் துயர் துடைத்திட இயலாது. எனவே,
புயல் காரணமாக பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு
ஒரு நிவாரணதொகுப்புஉதவிவழங்க நான்முடிவு
செய்துள்ளேன்.

Wednesday, January 11, 2012

பச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்: முதல்வர் புரட்சித்தலைவி அம்மா இன்று தொடங்கி வைக்கிறார் ஆண்டுக்கு குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் வீதம் 4 ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் வரை பெறலாம்

Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video

ச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட "முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டம்" இன்று (11-ம்
தேதி) முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர் களால் தொடங்கி வைக்கப்படுகிறது.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் பல்வேறு குறை
பாட்டுடன் கூடிய மருத்துவக் காப்பீட்டுத்
திட்டம் தனியார் நிறுவனம் மூலம் நடை
முறைப்படுத்தப்பட்டது.
அதற்கு மாற்றாக புதிய மருத்துவ காப்பீட்டுத்
திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என முதல
மைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
அறிவித்திருந்தார்கள்.
அதன்படி முதலமைச்சரின் விரிவான
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்
பட்டுள்ளது.திட்டத்தை முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மாஅவர்கள் தமதுதிருக்கரங்களால்தொடங்கி
வைக்கிறார்கள். தலைமைச் செயலகத்தில்
இதற்கான விழா நடைபெறுகிறது.
இன்றுமுதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்களால் தொடங்கி வைக்கப்படும் முதல
மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:&
இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு
குடும்பத்திற்கு வருடம்ஒன்றிற்கு ரூ.1 லட்சம் வீதம்,
4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் வழங்கப்படும்.
ஒரு சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு ஒரு
வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் வரை வழங்கப்படும்.
மொத்தம் 1,016 வகை சிகிச்சை முறைகளுக்கும்,
113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும், 23
நோய் கண்டறியும் முறைக்கும் வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தால் 1.34 கோடி குடும்பங்கள்
பயன்பெறும். பயனாளிகளுக்கு புதிய மருத்துவக்
காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
அறுவை சிகிச்சை தேவைப்படாத சிகிக்சை
களுக்கும், செலவழிக்கப்பட்டகட்டணத்தொகை
வழங்கப்படும். மேலும், சிகிச்சை சம்பந்தப்பட்ட
பரிசோதனைக் கட்டணங்களும் இந்தக்
காப்பீட்டுக்கு உட்படும்.
அமைந்துள்ளது.
முன்பு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சு
நிறுவனத்திடம் திட்டத்தை நிறைவேற்றும்
பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர்புரட்சித்தலைவிஅம்மாஅவர்கள்
அரசு திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை
யுனைடெட்இந்தியாஇன்சூரன்சுநிறுவனம்என்கிற
பொதுத்துறைநிறுவனத்திடம்ஒப்படைத்துள்ளது.

ஜனவரி 17: 95-வது பிறந்தநாளையட்டி, தலைமைக் கழகத்திலுள்ள கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மாலை அணிவிக்கிறார் கள்ளக்குறிச்சியில் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா-புரட்சித்தலைவர் திருவுருவச் சிலைகளை திறந்து வைக்கிறார் ஏழை மாணவர்களின் கல்லூரி கட்டணங்களுக்காக நிதியுதவி வழங்குகிறார்


கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 95-வது
பிறந்த நாளான வரும் 17ந் தேதி காலை 10.30 மணிக்கு, தலைமைக் கழக
வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, கழகப்
பொதுச்செயலாளர்-முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தி பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டு
இனிப்பு வழங்குகிறார்கள்.அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி பேருந்து நிலையத்தில்நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரதுமுழு திருவுருவ வெண்கலச் சிலைகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்து, ஏழை மாணவ, மாணவியர்களின் கல்லூரி கட்டணங்களுக்காக நிதியுதவிவழங்குகிறார்கள்.அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய
தெய்வம் புரட்சித்தலைவர் ?பாரத் ரத்னா? டாக்டர்
ஜனவரி 17: 95-வது பிறந்தநாளையட்டி, தலைமைக் கழகத்திலுள்ள
கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மாலை அணிவிக்கிறார்
கள்ளக்குறிச்சியில் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா-புரட்சித்தலைவர் திருவுருவச் சிலைகளை திறந்து வைக்கிறார்
ஏழை மாணவர்களின் கல்லூரி கட்டணங்களுக்காக நிதியுதவி வழங்குகிறார்
நிலையில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்
களின் கல்லூரி கட்டணங்களுக்காக நிதியுதவி
வழங்க உள்ளார்கள்.இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகி
களும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளு
மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம்,
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்
தலைவி ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர்.
இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர்
அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர்
பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்
பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய
அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி,
இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை
உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச்
சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப்
பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும்
பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள்.
கழகப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதா அவர்களின்
ஒப்புதலோடு இந்த அறிவிப்பு
வெளியிடப்படுகிறது
தலைமைக் கழகம்,
அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம்.
சென்னை-14
நாள்: 10.1.2012

சென்னை அருகே ரூ. 3500 கோடி முதலீட்டில் தொழில் நகரியம் அமைக்க முதல்வர் புரட்சித்தலைவி அம்மா முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை அருகே 1500 ஏக்கர் பரப்பளவில் ரூ. 3500கோடி முதலீட்டில்ஒருங்கிணைந்த தொழில்நகரியம் அமைக்கமுதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்காக, சென்னையில் ஆதரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முன்னிலையில், கையெத்தானது. மேலும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த அசென்டாஸ் நிறுவனமும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இரு குழு நிறுவனங்களும் இணைந்து, சென்னைக்கு அருகே, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டில், ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த தொழில் நகரியம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. தமிழக முதலமைச்சர் பு ர ட் சி த் த � ல வி அம்மாவை, தலைமைச் செயலகத்தில் ஜப்பான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்அமைச்சர் யூகியோஎடானோ சந்தித்துப்பேசினார்.இந்த ந்திப்பின்போது,தமிழ்நாட்டில் முதலீடுசெய்யத் திட்டமிட்டுள்ளஜப்பான் நாட்டு ிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க,சென்னையில் வர்த்தகஆதரவு மையம் அமைப்பதற்கு, தமிழ்நாடுதொழில் வழிகாட்டிமற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி மையத்திற்கும்,ஜப்பான் வெளிவர்த்தக அமைப் புக்கும் இடையேஒரு புரிந்துணர்வுஒப்
பந்தம் கையெழுத்தானது.இ ந் நி க ழ் ச் சி யி ல் ,உரையாற்றிய முதலமைச்சர் புரட்சித்தலைவிஅம்மா அவர்கள்,த மி ழ் ந � ட் டு க் கு ம் ,ஜப்பானுக்கும் இடையேஉள்ள பண்பாட்டுஉறவுகள், தமிழ் மற்றும்ஜப்பானிய மொழிக்கும்இடையேயுள்ள ஒற்றுமைகள் ஆகியன குறித்துவி ள க் க ம � கஎடுத்துரைத்தார்கள்.தமிழ்நாட்டில் முதலீடுசெய்ய திட்டமிட்டுள்ளஜப்பான் நாட்டின் நிறுவனங்களுக்கு ஆதரவுஅளிப்பதற்கான மையம்சென்னையில் அமைப்பதற்கானபுரிந்துணர்வுஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சிதெரிவித்த முதலமைச்சர்புரட்சித்தலைவி அம்மாஅவர்கள், இது ஒரு புதியசகாப்தத்தின் தொடக்கம்என்று வர்ணித்தார்கள்.தமிழக அரசின் புதியதொழில் கொள்கைவிரைவில்அறிவிக்கப்படும் என்று தெரிவித்தமுதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா, இந்ததொழில் கொள்கை,முதலீட்டாளர்களுக்குசாதகமாக இருப்பதுடன்,நீடித்த வளர்ச்சியைநோக்கமாக கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.